83ரன்.. 27ஓவர்.. தென் ஆப்பிரிக்காவை சுருட்டி இந்தியா அபார வெற்றி.. அரையிறுதி யாருடன்?.. புள்ளி பட்டியலில் நிரந்தர முதலிடம்!

0
1478
Virat

இந்தியாவில் நடைபெற்று வரும் 13ஆவது ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் இன்று இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகள் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் மோதிக்கொண்டன!

இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்று பேட்டிங் செய்த இந்திய அணிக்கு கேப்டன் ரோகித் சர்மா 40 (24), கில் 23 (24) ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்கள். இதற்கு அடுத்து ஜோடி சேர்ந்த விராட் கோலி மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் இருவரும் மிகச் சிறப்பாக விளையாடி அணியை மீட்டனர்.

- Advertisement -

இந்த ஜோடி 134 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து பிரிந்தது. ஸ்ரேயாஸ் 87 பந்துகளில் 77 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். இதற்கு அடுத்து வந்த கேஎல்.ராகுல் 17 பந்துகளில் 8 ரன்கள், சூரியகுமார் யாதவ் 14 பந்துகளில் 22 ரன்கள் எடுத்து அடுத்தடுத்து ஆட்டம் இழந்தார்கள்.

இதற்கு அடுத்து வந்த ரவீந்திர ஜடேஜா கடைசிக் கட்டத்தில் அதிரடியாக விளையாடி ஆட்டம் இழக்காமல் 15 பந்துகளில் 29 ரன்கள் எடுத்தார். விராட் கோலி 121 பந்துகளை சந்தித்து 10 பவுண்டரிகள் உடன் 101 ரன்கள் குவித்தார். இந்திய அணி 50 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 326 ரன்கள் எடுத்தது.

இதற்கு அடுத்து இலக்கை நோக்கி களம் இறங்கிய தென் ஆப்பிரிக்க அணிக்கு இந்தியாவுக்கு எதிராக இலங்கை அணிக்கு என்ன நடந்ததோ அதேதான் திரும்ப நடந்தது. தென்னாபிரிக்கா அணி 27.1 ஓவர்களில் 83 ரன்களுக்கு சுருண்டது. இந்திய அணி 243 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடர்ச்சியாக எட்டாவது வெற்றியைப் பதிவு செய்தது.

- Advertisement -

இந்திய அணி தரப்பில் மிகச் சிறப்பாக பந்து வீசிய ரவீந்திர ஜடேஜா 9 ஓவர்களுக்கு 1 மெய்டன், 33 ரன்கள், 5 விக்கெட் கைப்பற்றினார். சமி மற்றும் குல்தீப் இருவரும் தலா 2 விக்கெட் வீழ்த்தினார்கள். முகமது சிராஜ் 1 விக்கெட் கைப்பற்றினார். பும்ராவுக்கு முதல் முறையாக இந்த உலகக் கோப்பை தொடரில் கிடைக்கவில்லை.

இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி புள்ளி பட்டியலில் முதல் இடத்தை இனி இழக்கப் போவதில்லை என்பது முடிவாகி இருக்கிறது. எனவே அரையிறுதியில் தென் ஆப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளை இந்திய அணி சந்திப்பதற்கான வாய்ப்பு மிகக் மிகக் குறைவு என்பது குறிப்பிடத்தக்கது. இந்திய அணி அரை இறுதியில் நியூசிலாந்து, பாகிஸ்தான் இல்லை ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகளில் ஒரு அணியை சந்திக்கவே வாய்ப்புகள் மிக அதிகம்.