“7 வாரங்கள்.. 5 டெஸ்ட் போட்டிகள்.. இந்தியாகிட்ட சிக்கிட்டீங்க.. இனி சோதனைதான்” – மோர்கன் வெளிப்படையான பேச்சு

0
264
Morgan

இங்கிலாந்து அணி இந்த முறை இந்தியாவிற்கு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்கு சுற்றுப்பயணம் செய்திருக்கிறது. இந்த சுற்றுப்பயணத்தில் அவர்களுக்கு தனிப்பட்ட காரணங்களால் ஹாரி ப்ரூக் கிடைக்கவில்லை.

இங்கிலாந்து ஜோ ரூட் கேப்டன் பொறுப்பை விட்டு நகர்ந்ததற்கு பிறகு டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிரடியான அணுகுமுறையை பின்பற்றி வருகிறது. கிரிக்கெட்டின் மூன்று துறைகளிலும் அவர்கள் இதே அணுகுமுறையை வெளிப்படுத்துகிறார்கள்.

- Advertisement -

இங்கிலாந்து அணியின் அதிரடியான பாஸ்பால் அணுகுமுறை இதுவரை அவர்களுக்கு பெரிய அளவில் குறை சொல்ல முடியாத அளவுக்கு வெற்றியை கொடுத்து வந்திருக்கிறது. மேலும் இங்கிலாந்து ரசிகர்களை அது மகிழ்ச்சி படுத்தியதோடு கௌரவப்படுத்தியும் இருந்தது.

எனவே அவர்கள் விளையாடும் கிரிக்கெட் பிராண்ட் மீது உலகம் தழுவி ரசிகர்களின் பார்வை விழுந்தது. இதனால் அவர்கள் விளையாடும் டெஸ்ட் போட்டிகளுக்கு வெளியில் இருந்து வரவேற்பு வந்தது. இது இங்கிலாந்து இந்த அணுகு முறையை தொடர்ந்து விடாமல் விளையாட ஊக்கம் கொடுத்தது.

ஆனால் சுழற் பந்து வீச்சுக்கு சாதகமான நிலைமை கொண்ட இந்திய ஆடுகளங்களில், இங்கிலாந்தின் டெஸ்ட் கிரிக்கெட் அதிரடியான அணுகுமுறை வேலை செய்யவில்லை. மேலும் இப்படிப்பட்ட சாதகமான சூழ்நிலையை பயன்படுத்த மிகத் திறமையான சுழற் பந்துவீச்சாளர்கள் இந்திய அணியில் இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

தற்போது இங்கிலாந்து அணியின் இளமை இந்தியாவில் எவ்வாறு இருக்கும் என்பது குறித்து, 2019 ஆம் ஆண்டு ஒரு நாள் உலகக் கோப்பையை வென்று கொடுத்த கேப்டன் இயான் மோர்கன் பேசியிருக்கிறார்.

இதையும் படிங்க : “நான் மேட்சுக்கு முன்னவே சொன்னன்.. ஸ்டோக்ஸ் கேட்கவே இல்லை” – நாசர் ஹூசைன் புலம்பல்

இதுகுறித்து அவர் கூறும் பொழுது “இங்கிலாந்து அணுகுமுறை தொடர்ந்து ஆக்ரோஷமாக இருக்கும். நிலைமைகள் தொடர்ச்சியாக இங்கிலாந்துக்கு எதிராக இருக்கும் பொழுதும், பென் ஸ்டோக்ஸ் மற்றும் மெக்கலம் இருவரும் காட்டும் ஊக்கம் மகிழ்ச்சி அளிக்கிறது. அவர்கள் இந்த அணுகுமுறையை விட்டுத் தர மாட்டார்கள்.

சந்தேகமே இல்லாமல் இந்திய சுற்றுப்பயணத்தில் ஏழு வாரங்கள் ஐந்து டெஸ்ட் போட்டிகள் இங்கிலாந்தின் அணுகுமுறைக்கு மிகப்பெரிய சோதனையாக அமையும். நேற்று இந்தியா தனியாக நின்று பேட்டிங் செய்தது. எந்த ஒரு இடத்திலும் இங்கிலாந்தை போட்டிக்குள் வர அவர்கள் விடவே இல்லை” என்று கூறி இருக்கிறார்.