ஐபிஎல் தொடரில் 8 முக்கிய தென் ஆப்ரிக்கா வீரர்கள் பங்கேற்பது கேள்விக்குறி ? இறுதி நேரத்தில் கிளம்பியுள்ள சிக்கல்

0
148
Kasigo Rabada and Quinton de Kock

தென் ஆப்பிரிக்கா மற்றும் வங்கதேச அணிகளுக்கு எதிராக 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர் மற்றும் இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் வருகிற மார்ச் 18ஆம் தேதி முதல் ஏப்ரல் 11ஆம் தேதி வரை நடைபெற இருக்கின்றது. இதில் 3 ஒருநாள் போட்டிகள் மார்ச் 18 தொடங்கி மார்ச் 23-ம் தேதி வரையில் நடைபெற இருக்கின்றது

பங்களாதேஷ் அணிக்கு எதிராக நடைபெற இருக்கும் ஒரு நாள் தொடரில் விளையாடப் போகும் வீரர்களை தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் நிர்வாகம் இன்று வெளியிட்டது. அதில் இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் களம் இறங்க உள்ள எட்டு வீரர்கள் பெயர் இடம் பெற்றுள்ளது.
பந்துவீச்சாளர்கள் ககிசோ ரபாடா, லுங்கி இங்கடி, மார்கோ ஜென்சன் இவர்களைத் தொடர்ந்து பேட்ஸ்மேன்கள் வேன் டர் டஸ்சென், டேவிட் மில்லர், டிகாக், மார்க்ரம் மற்றும் ஆல்ரவுண்டர் வீரர் ட்வைன் பிரெடோரியஸ் இவர்களின் பெயர் ஒருநாள் தொடருக்கான வீரர்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ளது.

- Advertisement -

இறுதி முடிவை வீரர்கள்தான் எடுத்தாக வேண்டும்

ஒருநாள் தொடர் மார்ச் 23ஆம் தேதி நடைபெற்ற முடிந்தாலும் அதன் பின்னர் இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் ஏப்ரல் 11ம் தேதி வரையில் நடைபெற இருக்கின்றது. இங்கு மார்ச் 26 ஆம் தேதி அன்று ஐபிஎல் தொடர் தொடங்கிவிடும். அப்படி இருக்க டெஸ்ட் தொடரில் வீரர்கள் விளையாடலாமா அல்லது ஐபிஎல் தொடர்களில் விளையாடலாமா என்பதை வீரர்கள் முடிவு செய்து கொள்ளட்டும் என்று முன்பே தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் நிர்வாகம் உத்தரவு பிறப்பித்திருந்தது.

பிசிசிஐ விதிமுறைப்படி வெளிநாட்டில் இருந்து வரும் வீரர்கள் குறைந்தபட்சம் மூன்று நாட்களாவது தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும். அங்கே அவர்கள் பயோ பபுளில் இருந்தால் நேரடியாக மும்பையில் உள்ள பயோ பபுளில் இணைந்து கொள்ளலாம்.

ஆனால் தற்பொழுது தென் ஆப்பிரிக்கா மற்றும் பங்களாதேஷ் அணிக்கு எதிராக நடைபெறவிருக்கும் ஒருநாள் தொடரில் அவ்வாறு பயோ பபுள் பின்பற்றப் போவதில்லை. எனவே வீரர்கள் 23 ஆம் தேதி அன்று ஒருநாள் தொடரை முடித்து பின்னர் இங்கே மூன்று நாட்கள் தனிமைப் படுத்திக் கொள்ள வேண்டும். அதன் பின்னரே ஐபிஎல் தொடரில் அவர்களது அனைத்து விளையாட முடியும்.

- Advertisement -

மேல் கூறிய முறையும் வீரர்கள் எடுக்கும் முடிவைப் பொறுத்து தான். டெஸ்ட் தொடரில் விளையாட வேண்டும் என்று அவர்கள் முடிவெடுத்து விட்டால் நிச்சயமாக ஏப்ரல் 11ம் தேதி வரை அவர்கள் தென்னாப்பிரிக்காவில் பங்களாதேஷ் அணிக்கு எதிராக விளையாடுவார்கள். டெஸ்ட் தொடர் முடிந்ததும் இந்தியாவுக்கு வந்து முன்பு கூறியது போல இங்கே மூன்று நாட்கள் தனிமைப்படுத்தி கொண்ட பின்னரே அவர்கள் தங்களுடைய அணிக்கு விளையாட முடியும்.

டெஸ்ட் தொடரில் விளையாட வீரர்கள் முடிவு செய்து விட்டால் நிச்சயமாக அவர்கள் ஆரம்பத்தில் ஒரு சில போட்டிகளில் விளையாட சூழ்நிலை ஏற்படும் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே வீரர்கள் எந்த முடிவை இறுதியில் எடுப்பார்கள் என்று நாம் பொறுத்திருந்து பார்ப்போம்.