703 ரன்கள்; ஒரே இன்னிங்ஸில் இரண்டு இரட்டைச் சதங்கள்; இரண்டு சதங்கள்; அயர்லாந்துக்கு எதிராக அனல் பறந்த இலங்கை பேட்டிங் யூனிட்!

0
9014
SlvsIre

அயர்லாந்து அணி இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுவதற்கு இலங்கை நாட்டிற்குச் சுற்றுப்பயணம் செய்திருக்கிறது. இந்த டெஸ்ட் தொடரில் முதல் போட்டியில் 280 ரன்கள் மற்றும் இன்னிங்ஸ் வித்தியாசத்தில் அயர்லாந்து அணி தோல்வியைச் சந்தித்து இருந்தது!

இந்த நிலையில் இரண்டு நாட்களுக்கு முன்பு தொடங்கிய இரண்டாவது டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த அயர்லாந்து அணிக்கு பால் ஸ்டெர்லிங் 103, கர்ட்டீஸ் கேம்பர் 111 என இருவர் சதம் அடிக்க, முதல் இன்னிங்ஸில் அயர்லாந்து அணி 492 ரன்கள் சேர்த்தது.

- Advertisement -

இதையடுத்து முதல் இன்னிங்ஸை தொடங்கிய இலங்கை முதல் விக்கட்டுக்கு கேப்டன் கருணரத்னே மற்றும் நிஷான் மதுஷ்கா இருவரும் 228 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அசத்தினார்கள். கேப்டன் கருணரத்னே சதம் அடித்து 115 ரன்கள் வெளியேறினார்.

இதற்கு அடுத்து ஜோடி சேர்ந்த நிஷான் மதுஷ்கா மற்றும் குசால் மெண்டிஸ் இருவரும் 268 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து மேலும் அசத்தினார்கள். நிஷான் மதுஷ்கா இரட்டை சதம் அடித்து 25 ரன்களில் வெளியேறினார்.

இதற்கு அடுத்து ஜோடி சேர்ந்த குசால் மெண்டிஸ் மற்றும் அனுபவ வீரர் ஆஞ்சலோ மேத்யூஸ் இருவரும் 133 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தார்கள். குசால் மெண்டிஸ் இரட்டை சதம் அடித்து 245 ரன்களில் வெளியேறினார். அதிரடியாக விளையாடிய ஆஞ்சலோ மேத்யூஸ் 114 பந்துகளில் சதம் அடித்து அசத்தினார்.

- Advertisement -

இத்துடன் இலங்கை அணி தனது முதல் இன்னிங்ஸை மூன்று விக்கெட்டுகள் இழப்புக்கு 704 ரன்களுக்கு டிக்ளேர் செய்தது. இதைத்தொடர்ந்து அயர்லாந்து அணி ஒரு விக்கெட்டை இழந்து தற்பொழுது விளையாடி வருகிறது. இந்தப் போட்டியில் மொத்தம் நான்கு சதங்கள், அதில் இரண்டு இரட்டை சதங்கள், இரண்டு சதங்கள் வந்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது!

மேலும் இந்தப் போட்டியில் இரண்டு இரட்டை சத பார்ட்னர்ஷிப்கள், ஒரு சத பார்ட்னர்ஷிப் வந்திருக்கிறது. இந்தப் போட்டியில் இதுவரை மொத்தம் நான்கு சதங்கள் இரண்டு இரட்டை சதங்கள் என ஆறு சதங்கள் அடிக்கப்பட்டு இருக்கிறது!