97ரன்னுக்கு 7விக்கெட்.. அடுத்து கிளன் பிலிப்ஸ் செய்த மேஜிக்.. பங்களாதேஷை தாண்டியது நியூசிலாந்து!

0
811
Phillips

ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் முடிந்து இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்கு நியூசிலாந்து அணி பங்களாதேஷ் வந்திருக்கிறது.

இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் சியால்கட்டில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணியை அபாரமான முறையில் வீழ்த்தி பங்களாதேஷ் சிறப்பான வெற்றியை பெற்றது.

- Advertisement -

இந்த நிலையில் இரண்டு நாட்களுக்கு முன்பு மிர்பூர் மைதானத்தில் இரண்டாவது டெஸ்ட் போட்டி தொடங்கியது. இந்த டெஸ்ட் போட்டியில் முதலில் டாஸ் வென்ற பங்களாதேஷ் அணி பேட்டிங் செய்வது என தீர்மானித்தது.

பேட்டிங் செய்வதற்கு கடினமான ஆடுகளத்தில் பங்களாதேஷ் அணியாலும் நிலைத்து நின்று விளையாட முடியவில்லை. பங்களாதேஷ் முதல் இன்னிங்ஸில் 66.2 ஓவரில் 172 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. ரஹீம் 35 ரன்கள் எடுத்தார்.

பந்து வீசிய நியூசிலாந்து தரப்பில் சான்ட்னர் மற்றும் பகுதிநேர சுழற் பந்துவீச்சாளர் கிளன் பிலிப்ஸ் இருவரும் தலா மூன்று விக்கெட் கைப்பற்றினார்கள். இந்தத் தொடரில் பிலிப்ஸ் பந்துவீச்சு சிறப்பாக இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

இதற்கு அடுத்து தனது முதல் இன்னிங்ஸை தொடங்கிய நியூசிலாந்து அணிக்கு மிகப்பெரிய அதிர்ச்சி காத்திருந்தது. முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 55 ரன்களுக்கு ஐந்து விக்கெட்டுகளை நியூசிலாந்து இழந்தது.

இதற்கு அடுத்து இரண்டாவது நாள் போட்டியில் மழையின் காரணமாக ஒரு பந்து கூட வீசப்படாமல் கைவிடப்பட்டது குறிப்பிடத்தக்கது. மூன்றாவது நாளான இன்று 97 ரன்களுக்கு ஏழு விக்கெட்டுகளை நியூசிலாந்து இழந்துவிட்டது.

இதற்குமேல் பேட்டிங் செய்ய கடினமான ஆடுகளத்தில் பொறுமையாக விளையாடுவதால் எந்த பயனும் இல்லை என்று உணர்ந்த கிளன் பிலிப்ஸ் விக்கெட்டை பற்றி கவலைப்படாமல் அதிரடியில் ஈடுபட்டார்.

சிறப்பாக விளையாடிய அவர் அரைசதம் கடந்தார். மொத்தம் 72 பந்துகள் விளையாடிய அவர் ஒன்பது பவுண்டரிகள் மற்றும் நான்கு சிக்ஸர்கள் உடன் 87 ரன்கள் குவித்து ஆட்டம் இழந்தார். இந்தக் குறிப்பிட்ட ஆடைகளத்தில் அவர் அடித்த ரன்கள் இரட்டை சதத்திற்கு சமமானது என்று கூறலாம்.

இறுதியாக நியூசிலாந்து அணி 37.1 ஓவரில் 180 ரன்கள் எடுத்து, பங்களாதேஷ் அணியை விட 8 ரன்கள் கூடுதலாக பெற்று, முடிவில் ஆல் அவுட் ஆனது. இதற்கடுத்து தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய பங்களாதேஷ் 38 ரன்களுக்கு இரண்டு விக்கெட் இழந்து விளையாடி வருகிறது.