“நான் மேட்சுக்கு முன்னவே சொன்னன்.. ஸ்டோக்ஸ் கேட்கவே இல்லை” – நாசர் ஹூசைன் புலம்பல்

0
129
Hussain

இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையே ஹைதராபாத் ராஜீவ் காந்தி மைதானத்தில் நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியில், இங்கிலாந்து அணியின் பவுலிங் யூனிட் மிகவும் பலவீனமாக காணப்படுகிறது.

அனுபவம் சுழற் பங்கு வீச்சாளர் லீச் உடன் அனுபவம் மற்ற டாம் ஹார்ட்லி மற்றும் ரேகான் அகமத் இருவரும் சேர்க்கப்பட்டு இருக்கிறார்கள். இதையெல்லாம் விட ஆச்சரியப்படத்தக்க வேறு ஒரு முடிவை இங்கிலாந்து எடுத்து இருந்தது.

- Advertisement -

சாதனை வேகப்பந்துவீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சனை கைவிட்டு, ஒரே ஒரு வேகப்பந்து வீச்சாளராக மார்க் வுட்டை தேர்ந்தெடுத்து இருந்தது. இந்த முடிவு குறித்து ஆரம்பத்தில் இருந்தே எல்லோரும் தங்களுடைய விமர்சனத்தை முன்வைத்து வந்தார்கள்.

மார்க் வுட் இடம் வெறும் வேகம் மட்டும்தான் இருக்கிறது. ஆனால் ஜேம்ஸ் ஆண்டர்சன் புதிய பந்தில் இரண்டு விதமாக ஸ்விங் செய்வார். மேலும் பந்து தேய்ந்த நிலையில் ரிவர்ஸ் ஸ்விங் செய்வார்.

ஒரு முனையில் அவரால் நிச்சயம் கண்ட்ரோல் தர முடியும். அதை வைத்து மற்றவர்கள் விக்கெட் வீழ்த்துவதற்கான முயற்சியில் ஈடுபடலாம். ஆனால் தற்பொழுது இங்கிலாந்து பவுலிங் யூனிட்டில் கண்ட்ரோல் தருவதற்கு ஒரு பந்துவீச்சாளர் கூட இல்லை. ஜெய்ஸ்வால் அடித்துக் காட்டியதே நல்ல உதாரணம். இதுகுறித்து போட்டிக்கு முன்பாகவே நாசர் உசைன் எச்சரிக்கை செய்திருந்தார்.

- Advertisement -

தற்பொழுது இது குறித்து பேசி இருக்கும் அவர் கூறும் பொழுது ” கடந்த சில ஆண்டுகளில் துணை கண்டத்தில் ஜேம்ஸ் ஆண்டர்சனின் திறமைகள் விதிவிலக்கானவை. இங்கிலாந்து அணியின் சிறந்த வீரர் அவர். மேலும் அவர்தான் இங்கிலாந்தின் சிறந்த பந்துவீச்சாளர். போட்டிக்கு முன்பே நான் ஆண்டர்சனை சேர்த்து இருப்பேன் என்று கூறியிருந்தேன்.

ஜோ ரூட் உடன் சேர்த்து அணியில் மொத்தம் நான்கு சுழற் பந்து வீச்சாளர்கள் இருப்பதைக் கண்டு நான் ஆச்சரியப்பட்டேன். இதில் ஒரே ஒரு வேகப்பந்து வீச்சாளர் இருந்த காரணத்தினால் அணியில் சமநிலையே இல்லை. ஆண்டர்சனை கட்டாயம் சேர்த்து இருக்க வேண்டும். மேலும் இன்னொரு வேகப்பந்து வீச்சாளராக ராபின்சன் இருந்திருக்க வேண்டும்.

இதையும் படிங்க : “சிறந்த ஆல் ரவுண்டர் ஸ்டோக்ஸா ஜடேஜாவா?.. அவரை அவமானப்படுத்த வேண்டாம்” – இந்திய முன்னாள் வீரர் கோபம்

ஜாக் லீச் அதிக ஓவர்கள் பந்து வீசவில்லை. அது ஏன் என்று புரிகிறது. நீண்ட நாட்கள் கழித்து விளையாட வரும் அவருக்கு அதிக ஓவர்கள் கொடுப்பது பற்றி யோசித்து இருக்கலாம். எனவே அவருடைய இடத்தில் இரண்டாவது சுழற் பந்துவீச்சாளருக்கு நீங்கள் செல்லும் பொழுது, அவர் சரியான கண்ட்ரோல் தரவில்லை” எனக் கூறியிருக்கிறார்.