689 ரன்.. 4 சதங்கள்.. 48 வருட உலக கோப்பை வரலாற்றில் பாகிஸ்தான் மாஸ் உலக சாதனை.. புதிய சரித்திரம்!

0
13114
Rizwan

இன்று இலங்கை பாகிஸ்தான் அணிகள் ஹைதராபாத் ராஜீவ் காந்தி மைதானத்தில் நடத்தினர். பாகிஸ்தான் முதல் போட்டியில் வென்று இருக்க இலங்கை அணி தோல்வி அடைந்திருந்தது.

இந்தப் போட்டிக்கு டாசில் வெற்றி பெற்ற இலங்கை முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்தது. குசால் பெரேரா ரன் ஏதும் இல்லாமல் ஆட்டம் இழந்தார். இதற்கு அடுத்து ஜோடி சேர்ந்த பதும் நிஷாகங்கா மற்றும் குஷால் மெண்டிஸ் இருவரும் அதிரடியான ஆட்டத்தில் ஈடுபட்டார்கள்.

- Advertisement -

பதும் நிஷாங்கா 51 ரன்கள் எடுத்து வெளியேற, குஷால் மெண்டிஸ் 65 பந்துகளில் சதம் அடித்து, 77 பந்துகளில் 122 ரன்கள் குவித்து ஆட்டம் இழந்தார். சதிரா சமரவிக்ரமா 89 பந்துகளில் 108 ரன்கள் குவித்து ஆட்டம் இழந்தார்.

இதற்கு நடுவில் சரித் அசலங்கா 1, தனஞ்செய டி சில்வா 25, டசன் சனகா 12, வெல்லாலகே 10, மதிஷா தீக்ஷனா 0, பதிரனா 1* என ரன்கள் எடுக்க 50 ஓவர்கள் முடிவில் இலங்கை அணி ஒன்பது விக்கெட் இழப்புக்கு 344 ரன்கள் குறித்தது. ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பையில் பாகிஸ்தான் அணி விட்டுத்தந்த அதிகபட்ச ரன் இதுவாகும். ஹசன் அலி பாகிஸ்தான் தரப்பில் நான்கு விக்கெட் கைப்பற்றினார்.

இதற்கு அடுத்து பெரிய இலக்கை நோக்கி களம் இறங்கிய பாகிஸ்தான் அணிக்கு இமாம் உல் ஹக் 12 மற்றும் பாபர் அசாம் 10 ரன்கள் என துவக்கத்திலேயே வெளியேறி அதிர்ச்சி கொடுத்தார்கள்.

- Advertisement -

ஆனால் இதற்குப் பிறகு ஜோடி சேர்ந்த அப்துல்லா ஷபிக் மற்றும் முகமது ரிஸ்வான் இருவரும் சேர்ந்து, பொறுமையாக விளையாடியதோடு தேவைப்படும் பொழுது அடித்தும் விளையாடி சரியான ரன் ரேட்டை தொடர்ந்து வந்தார்கள்.

சிறப்பாக விளையாடிய அப்துல்லா ஷபிக் சதம் அடித்து, 103 பந்துகளில் 113 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். இந்த ஜோடி 176 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து வெற்றியை பாகிஸ்தான் பக்கம் அதிரடியாக திருப்பியது.

இதற்கு அடுத்து வந்த சவுத் ஷகில் தன் பங்குக்கு 31 ரன்கள் எடுத்து வெளியேறினார். கடைசி கட்டத்தில் வந்த இப்திகார் அகமது ஆட்டம் இழக்காமல் பத்து பந்தில் 22 ரன்கள் எடுத்தார். இறுதி வரை களத்தில் நின்று வெற்றிக்கான ரன்னை அடித்த முகமது ரிஸ்வான் 121 பந்துகளில் 131 ரன்கள் குவித்தார். இறுதியாக பாகிஸ்தான் அணி ஆறு விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இலங்கை தரப்பில் மதுசங்கா இரண்டு விக்கெட் கைப்பற்றினார்.

இந்த வெற்றியின் மூலம் 48 வருட ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை வரலாற்றில் அதிக ரன்கள் செய்த அணி என்ற உலகச் சாதனையை பாகிஸ்தான் அணி படைத்து அசத்தியிருக்கிறது!