12 பந்தில் 6 ஃபோர்.. ஷாகின் அப்ரிடிக்கு சம்பவம்.. ரோகித்-கில் அதிரடி அரைசதம்.. ஆசிய கோப்பையில் இந்தியா கலக்கல்!

0
1318
Gill

பலத்தை எதிர்பார்ப்புகளுக்கு இடையே, இன்று இந்தியா பாகிஸ்தான் அணிகள் ஆசிய கோப்பை தொடரில் இரண்டாவது சுற்றில் மோதிக் கொள்ளும் போட்டி, இலங்கை கொழும்பு பிரேமதாசா மைதானத்தில் சற்று முன் துவங்கி நடைபெற்று வருகிறது.

இந்தப் போட்டிக்கான டாசில் வென்ற பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் முதலில் தங்கள் அணி பந்து வீசும் என முடிவு செய்தார். இந்திய அணியின் தரப்பில் ஸ்ரேயாஸ் ஐயர் நீக்கப்பட்டு, அவருக்கு பதிலாக கேஎல் ராகுல் அணியில் இடம் பிடித்தார். இஷான் கிஷானுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது.

- Advertisement -

இந்தப் போட்டி துவங்குவதற்கு முன்பாக, பாகிஸ்தான் அணிக்கு எதிராக இந்த தொடரின் முதல் சுற்றின் போட்டியில், இந்திய அணியின் டாப் ஆர்டர் பேட்மேன்கள் பாகிஸ்தான் அணியின் வேகப்பந்து வீச்சுக்கு மிகுந்த சிரமத்தை சந்தித்தார்கள்.

எனவே இந்திய டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் இந்த போட்டியில் பாகிஸ்தான் வேகப் பந்துவீச்சாளர்களுக்கு எதிராக என்ன செய்வார்கள்? என்று பெரிய விவாதம் சென்று கொண்டிருந்தது. பாகிஸ்தான் அணிக்கான வெற்றி வாய்ப்பை அதிகம் இருப்பதாக கணிக்கப்பட்டது.

இந்த நிலையில் இன்று துவங்கிய போட்டியில் ரோகித் சர்மா முதலில் பேட்டிங்கை ஆரம்பித்தார். பாகிஸ்தான் தரப்பில் முதல் ஓவரை வழக்கம்போல் ஷாஹிம் ஷா அப்ரிடி வீசினார். முதல் ஐந்து பந்துகளில் பொறுமை காட்டிய ரோகித் சர்மா, ஆறாவது பந்தில் அவரை சிக்ஸருக்கு அடித்தார். முதல் ஓவரில் ஒருநாள் கிரிக்கெட்டில் அவரை சிக்ஸருக்கு அடித்தவர் ரோகித் சர்மா மட்டுமே.

- Advertisement -

இதற்கு அடுத்து இரண்டாவது ஓவரை நசீம் ஷா வீச வந்தார். அவரது ஓவரின் முதல் பந்தில் தேர்ட் மேன் திசையில் சுப்மன் கில் பந்தை தூக்கி அடிக்க, ஷாஹீன் ஷா அப்ரிடி அதை பிடிக்க தவறினார்.

இதற்கு அடுத்து சுப்மன் கில் பேட்டிகள் அனல் பறக்க ஆரம்பித்தது. குறிப்பாக அவர் ஷாகின் அப்ரிடி பந்துவீச்சை குறி வைத்து தாக்கினார். அவரது பந்துவீச்சில் 12 பந்துகளை சந்தித்த அவர் ஆறு பவுண்டரிகள் நொறுக்கி தள்ளினார். ஷாகின் அப்ரிடிக்கு பாபர் அசாம் மூன்று ஓவர்களோடு நிறுத்திக் கொண்டார்.

இன்னொரு புறத்தில் சுப்மன் கில் நசிம் ஷா ஓவரிலும் மிக தைரியமாக சென்று இரண்டு பவுண்டரிகள் விளாசினார். கடந்த பாகிஸ்தான் போட்டியில் அவரது பேட்டிங் விமர்சனத்திற்கு உள்ளானதற்கு, இந்தப் போட்டியில் தனது பேட்டால் தக்க பதிலடி கொடுத்திருக்கிறார்.

தொடர்ந்து சிறப்பாக விளையாடிய சுப்மன் கில் 37 பந்தில் பத்து பவுண்டரிகளுடன் அதிரடியாக அரை சதம் அடித்து அசத்தியிருக்கிறார். ரோஹித் சர்மாவும் தனது அரை சதத்தை 42 பந்தில் நிறைவு செய்தார். ரோகித் சர்மாவுக்கு இது 50 ஆவது அரை சதம். இந்த ஜோடி தற்பொழுது 100 ரன்கள் பார்ட்னர்ஷிப்பை தாண்டி விளையாடி வருகிறது!