கிரிக்கெட் வாழ்க்கையின் கடைசிப் பந்தில் விக்கெட் எடுத்த 6 அதிசய வீரர்கள்!

0
3083
Broad

கிரிக்கெட் உலகில் தங்களுக்கென்று தனி இடத்தை உருவாக்கிக் கொண்ட லெஜெண்ட் வீரர்கள் பல பேர் இருக்கிறார்கள். அவர்களில் சிலர் தங்களுடைய கிரிக்கெட் வாழ்க்கையின் கடைசி பந்தில் விக்கெட் வீழ்த்திய அதிசய வீரர்களாக இருக்கிறார்கள். அப்படியான ஆறு வீரர்கள் யார் என்றுதான் இந்தக் கட்டுரை தொகுப்பில் நாம் பார்க்க இருக்கிறோம்.

கிளன் மெக்ராத் ஆஸ்திரேலியா :

- Advertisement -

வேகத்தை விட லைன் மற்றும் லென்த்தான் மிகவும் முக்கியம் என்று நிரூபித்த நவீன கிரிக்கெட் உலகின் லெஜன்ட் வேகபந்துவீச்சாளரான இவர், டெஸ்ட் கிரிக்கெட்டில் முதல் முதலாக 500 விக்கெட்டுகளை கைப்பற்றிய வேகப்பந்துவீச்சாளர் என்ற சாதனையைப் படைத்திருக்கிறார். ஒட்டு மொத்தமாக 949 சர்வதேச விக்கெட்டுகளை வீழ்த்தியிருக்கும் இவர், தன்னுடைய கடைசி ஆட்டத்தின் கடைசிப் பந்தில் ஜேம்ஸ் ஆண்டர்சன் விக்கெட்டை வீழ்த்தினார்.

லசீத் மலிங்கா இலங்கை :

டி20 கிரிக்கெட் வருகைக்கு பிறகு வந்த லெஜெண்ட் வேகப்பந்துவீச்சாளர். இவரது சிலிங் ஆக்சன் மற்றும் யார்க்கர்கள் தனி சிறப்பு வாய்ந்தவை. இவர் ஹாட்ரிக் விக்கெட்டுகளை மட்டும் மொத்தமாக ஐந்து முறை வீழ்த்தியிருக்கிறார். இவருடைய கடைசி போட்டி பங்களாதேஷுக்கு எதிராக கொழும்பு மைதானத்தில் நடைபெற்றது. அந்தப் போட்டியில் இவர் தனது கடைசி பந்தில் முஷ்பிக்யூர் ரஹீம் விக்கெட்டை வீழ்த்தினார்.

- Advertisement -

முத்தையா முரளிதரன் இலங்கை :

சந்தேகத்திற்கு இடம் இன்றி 1330 சர்வதேச விக்கெட்டுகளை வீழ்த்தி அதிக சர்வதேச விக்கட்டுகள் வீழ்த்திய பந்து வீச்சாளராக மிகப்பெரிய அரியணையில் அமர்ந்திருக்கிறார். இவருடைய சாதனைகள் என்றால் அதற்கு ஒரு தனி கட்டுரைகளை எழுத வேண்டிய அளவுக்கு இருக்கிறது. இவர் தனது கிரிக்கெட் வாழ்க்கையின் கடைசி பந்தில் தனது 800 வது இக்கட்டாக இந்திய வீரர் பிரக்கியான் ஓஜா விக்கெட்டை வீழ்த்தினார்.

ஸ்டூவர்ட் பிராட் இங்கிலாந்து :

இங்கிலாந்து அணிக்காக டெஸ்ட் கிரிக்கெட்டில் ஆண்டர்சனுக்கு அடுத்து அதிக விக்கெட் வீழ்த்திய வேகப்பந்துவீச்சாளராக இருப்பவர். மேலும் ஆண்டர்சன் உடன் இணைந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட விக்கட்டுகளை கைப்பற்றி உலக சாதனையில் முதலிடத்தில் இருப்பவர். இவருடைய கடைசி போட்டியாக அமைந்த தற்போது முடிந்திருக்கும் ஆசஸ் தொடரின் ஐந்தாவது டெஸ்ட் போட்டியில், தனது கிரிக்கெட் வாழ்க்கையின் கடைசிப் பந்தில் அலெக்ஸ் கேரி விக்கெட்டை வீழ்த்தினார்.

ரிச்சர்டு ஹாட்லி நியூசிலாந்து :

கபில்தேவ் இவரது சாதனையை முறியடிக்கும் வரை டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கட்டுகள் வீழ்த்திய பந்துவீச்சாளராக இருந்தார் இந்த வேகப்பந்துவீச்சாளர். ஒருநாள் கிரிக்கெட்டில் ஆயிரம் ரன்கள், 100 விக்கெட்டுகளையும் கைப்பற்றிய முதல் பந்துவீச்சாளர் இவர்தான். இவர் தனது கடைசி போட்டியை இங்கிலாந்துக்கு எதிராக விளையாடி, அந்த போட்டியில் தனது கிரிக்கெட் வாழ்க்கையின் கடைசி பந்தில் மால்கம் விக்கெட்டை வீழ்த்தினார்.

ஆடம் கில்கிரிஸ்ட் ஆஸ்திரேலியா :

இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ள ஆச்சரியமான பெயர் இது. மற்ற எல்லோரும் பந்துவீச்சாளர்களாக இருக்க இவர் மட்டுமே ஒரு விக்கெட் கீப்பராக இந்த பட்டியலில் இடம் பிடித்திருக்கிறார். விக்கெட் கீப்பர் பந்துவீசி விக்கெட் வீழ்த்தியதோடு, தனது கிரிக்கெட் வாழ்க்கையின் கடைசி பந்தில் வீழ்த்திய வீரர்களின் பட்டியலில் இணைந்தது மிகப்பெரிய வினோதமானது. ஐபிஎல் தொடரில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்காக இவர் விளையாடிய பொழுது, மும்பை அணிக்கு எதிரான ஒரு போட்டியில், அந்த அணிக்கு வெற்றிக்கு 51 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், ஒரு விக்கெட் மட்டுமே கைவசம் இருந்தது. அப்பொழுது பந்து வீசிய இவர் தனது கிரிக்கெட் வாழ்க்கையின் கடைசிப் பந்தில் ஹர்பஜன் சிங் விக்கட்டை வீழ்த்தினார்.