கிரிக்கெட் செய்திகள் | Daily Cricket News in Tamil

6.4 உயரமுள்ள இடது கை வேகப் பந்துவீச்சாளர்கள் பார்த்தால் என்கிட்ட சொல்லுங்க – ராகுல் டிராவிட் பரபரப்பான பேச்சு!

கிரிக்கெட் விளையாட்டில் வேகப்பந்துவீச்சில் இடது கை வேகப்பந்து வீச்சாளர்கள் வலது கை பேட்ஸ்மேன்களுக்கு உண்டாக்கும் கோணமும், ஸ்விங் செய்து பந்தை உள்ளே கொண்டு வரும் இலாவகமும் அபாரமானது, எதிர்த்து விளையாட மிக மிக கடினமானது!

- Advertisement -

இப்படியான காரணத்தால் உலக கிரிக்கெட்டில் ஒவ்வொரு அணியிலும் இடது கை வேகப்பந்து வீச்சாளர்களுக்கு எப்பொழுதும் ஒரு இடம் காலியாகவே இருக்கும். இடது கை வேகப்பந்துவீச்சாளர் என்பதற்காகவே அணியில் இடம் பெறுபவர்களும் உண்டு!

உலக அளவில் தற்பொழுது ஆஸ்திரேலியாவின் மிட்ச்சல் ஸ்டார்க், நியூசிலாந்தின் டிரண்ட் போல்ட், பாகிஸ்தானின் ஷாகின் அப்ரிடி எதிரணி பேட்ஸ்மேன்களுக்கு சிம்ம சொப்பனமாக இருந்து வருகிறார்கள்!

இந்திய கிரிக்கெட்டில் இடதுகை வேகப்பந்து வீச்சாளர் ஜாகீர் கானுக்குப் பிறகு வெற்றிகரமான இடதுகை வேகபந்து வீச்சாளர்கள் இல்லாமல் அந்த இடம் தற்பொழுது வரை காலியாக இருக்கிறது என்றுதான் கூற வேண்டும்.

- Advertisement -

இதுகுறித்து இந்திய தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் இடம் பத்திரிக்கையாளர்கள் கேள்வியை முன்வைக்க அதற்கு ராகுல் டிராவிட் வெளிப்படையாகவும் நகைச்சுவையாகவும் பதில் அளித்து இருப்பது தற்பொழுது வைரல் ஆகி வருகிறது!

ராகுல் டிராவிட் பதிலளிக்கும் போது
” நல்ல திறமையான இடது கை வேகப்பந்துவீச்சாளர்கள் அணிக்கு கிடைப்பது அரிது. இந்திய அணியில் ஜாதிர்கான் ஓய்வுக்குப் பிறகு அவரது இடத்தை நிரப்ப யாரும் வரவில்லை. அர்ஸ்தீப் சிங் இடது கை வேகப்பந்து வீச்சாளர் என்றாலும் இன்னும் அவர் தனது முழுமையான திறனை வெளிப்படுத்தவில்லை. ஸ்டார்க், ஷாகின் போன்று 6.4 அடி உயரமுள்ள இடது கை வேகப் பந்துவீச்சாளர்களை எங்காவது பார்த்தால் என்னிடம் சொல்லுங்கள்” என்று கூறியிருக்கிறார்!

- Advertisement -
Published by