4வது டெஸ்ட்.. நாளை வலிமையான உத்தேச இந்திய பிளேயிங் XI.. 3 மாற்றங்கள் நடக்குமா?

0
529
ICT

இங்கிலாந்து ஆண்கள் கிரிக்கெட் அணியின் ஐந்து போட்டிகள் கொண்ட இந்திய டெஸ்ட் சுற்றுப்பயணத்தில், நாளை ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சி நகரில் அமைந்திருக்கும் கிரிக்கெட் மைதானத்தில் நான்காவது டெஸ்ட் போட்டி நடக்க இருக்கிறது.

இதுவரை நடைபெற்ற மூன்று டெஸ்ட் போட்டிகளில் இந்தியா இரண்டையும் இங்கிலாந்து ஒரு போட்டியையும் வென்று இருக்கின்றன. எனவே இங்கிலாந்து அணிக்கு நான்காவது டெஸ்ட் போட்டி வாழ்வா சாவா போட்டியாக அமைந்திருக்கிறது.

- Advertisement -

நடக்க இருக்கும் போட்டியில் இந்திய அணியில் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் பும்ராவுக்கு ஓய்வு கொடுக்கப்பட்டிருக்கிறது. கேஎல்.ராகுல் காயத்தின் காரணமாக நான்காவது டெஸ்ட் போட்டியில் இருந்தும் ரூல்டு அவுட் செய்யப்பட்டு இருக்கிறார்.

மேலும் இரண்டு வாய்ப்புகள் பெற்றிருக்கும் ரஜத் பட்டிதார் இரண்டு வாய்ப்புகளையும் பயன்படுத்திக் கொள்ளவில்லை. வெளியில் நல்ல பேட்டிங் ஃபார்மில் இடது கை இளம் பேட்ஸ்மேன் படிக்கல் இருக்கிறார். ராஞ்சி ஆடுகளம் சுழல் பந்துவீச்சுக்கு சாதகமாக இருக்கும் என கூறப்படுகிறது. இதன் காரணமாக ஒரே ஒரு வேகப்பந்து வீச்சாளர் இடம் பெறலாம் எனவும் சொல்லப்படுகிறது.

நாளைய போட்டிக்கு இந்திய அணி இந்த வகையிலான மாற்றங்களை செய்வதற்குதான் அதிகபட்ச வாய்ப்புகள் உண்டு. ஆனால் ரோகித்-ட்ராவிட் கூட்டணி ரஜத் பட்டிதாருக்கு இன்னும் ஒரு வாய்ப்பை வழங்கும் என்று எதிர்பார்க்கலாம். மேலும் ஒரு வேகப்பந்துவீச்சாளருடன் செல்வதை இவர்கள் விரும்பியதில்லை.

- Advertisement -

எனவே கடந்த போட்டியில் இருந்து அணியில் பெரிய மாற்றங்கள் இருக்காது. பும்ரா இடத்தில் முகேஷ் குமாருக்கு வாய்ப்பு தரப்படாமல், ஆகாஷ் தீப்புக்கு அறிமுகத்தை தருவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருக்கிறது. இவர் பேட்டிங்கும் நன்றாக செய்யக் கூடியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

நான்காவது டெஸ்ட் போட்டிக்கான உத்தேச இந்திய பிளேயிங் லெவன் :

ஜெய்ஸ்வால், ரோகித் சர்மா, சுப்மன் கில், ரஜத் பட்டிதார், சர்ப்ராஸ் கான், ரவீந்திர ஜடேஜா, துருவ் ஜுரல், ரவிச்சந்திரன், அஸ்வின், குல்தீப் யாதவ், ஆகாஷ் தீப் மற்றும் முகமது சிராஜ்.