டி20 உலககோப்பை 2024.. சாம்சனின் மாஸ்டர் பிளான்.. செலக்டர்ஸ்க்கு புது தலைவலி!

0
557
Sanju

இந்திய அணியில் 2015ஆம் ஆண்டு அறிமுகமாகி, எட்டு ஆண்டுகளாக 39 போட்டிகளில் மட்டுமே விளையாடி இருக்கும் சஞ்சு சாம்சனின் சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கை யாருக்கும் புதிரான ஒன்று.

சராசரியாக வருடத்திற்கு அவர் முழுமையாக 5 போட்டிகள் கூட விளையாடவில்லை என்பதாக இருக்கிறது. மேலும் கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டுமே இந்த 39 போட்டிகளில் பெரும்பாலான போட்டிகளை விளையாடியிருக்கிறார்.

- Advertisement -

உலகின் முதல் நிலை டி20 லீக்கான ஐபிஎல் தொடரில் ஒரு அணிக்கு கேப்டனாக இருந்து வழிநடத்தக்கூடிய ஒருவர், இந்திய அணியின் நிரந்தரமான வீரராக இல்லாமல் இருப்பது, சற்று வியப்பான விஷயம். ஏனென்றால் அந்த அளவிற்கு திறமை இருந்தால், நிச்சயம் அவர் இந்திய அணியில் நிரந்தரமான வீரராகவும் இருந்தாக வேண்டும்.

இந்திய அணி எந்த வடிவத்தில் வெள்ளைப் பந்தில் உலகக்கோப்பை விளையாட இருக்கிறதோ அந்த வடிவத்தில் சாம்சனுக்கு வாய்ப்பு தர மாட்டார்கள். வேறொரு வடிவத்தில் வாய்ப்பு தருவார்கள். தற்பொழுதும் கூட டி20 உலகக்கோப்பை வரவிருக்கும் நிலையில், தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக ஒரு நாள் கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணியில் வாய்ப்பு கொடுத்தார்கள். தற்பொழுது இந்திய டி20 அணிக்குள் வர சாம்சன் புதிய திட்டம் தீட்டி இருக்கிறார்.

2023 மற்றும் 2024 ஆம் ஆண்டுக்கான உள்நாட்டு டெஸ்ட் தொடரான ரஞ்சி தொடரில் கேரள அணியை சாம்சன் முதல் இரண்டு போட்டிகளில் வழிநடத்த இருக்கிறார். ஜனவரி 5, முதல் ஆட்டத்தில் உத்தரபிரதேச அணிக்கு எதிராகவும், ஜனவரி 12, ஜார்கண்ட் அணிக்கு எதிராகவும் கேரளா விளையாடும் போட்டிக்கு கேப்டனாக அறிவிக்கப்பட்டிருக்கிறார்.

- Advertisement -

இந்த சமயத்தில் இந்தியாவில் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக இந்திய அணி விளையாடும் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இருக்கிறது. உள்நாட்டில் மூன்று வடிவ தொடர்களிடம் சாம்சன் விளையாடாதது ஒரு பிரச்சினையாக இருந்து வந்தது. எனவே அவர் இந்த முறை இந்திய வெள்ளைப்பந்து அணிகளுக்குள் வந்துவிட, ரஞ்சி தொடரிலும் கேரளா அணிக்காக விளையாட முடிவு எடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது!