404 ரன்.. 638 பந்து… யுவராஜ் சிங்கின் 24 வருட சாதனையை முறியடித்த கர்நாடக வீரர்

0
783
U19

19 வயது உட்பட்டவர்களுக்கான கூச் பெகார் டிராபியின் இறுதிப்போட்டி தற்பொழுது நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் கர்நாடகா மற்றும் மும்பை அணிகள் மோதிக் கொள்கின்றன.

இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 380 ரன்கள் எடுத்தது. கர்நாடக அணியின் தரப்பில் ராகுல் டிராவிட்டின் மகன் சமீத் ட்ராவிட் வேகபந்துவீச்சாளராக இரண்டு விக்கெட்டுகள் கைப்பற்றி இருந்தது, நேற்று முன் தினம் தலைப்பு செய்தியாக சமூக வலைதளத்தில் இருந்தது.

- Advertisement -

இந்த நிலையில் தமது முதல் இன்னிங்ஸ் துவங்கி விளையாடிய கர்நாடக அணிக்கு பிரகார் சதுர்வேதி மற்றும் கார்த்திக் இருவரும் சேர்ந்து முதல் விக்கெட்டுக்கு 109 ரன்கள் சேர்த்தார்கள். கார்த்திக் 67 பந்துகளில் 50 எடுத்து ஆட்டம் இழந்தார்.

இதற்கு அடுத்து ஹர்சில் தர்மானி வந்து பிரகாஷ் சதுர்வேதி உடன் ஜோடி சேர்ந்து கர்நாடக அணியின் ஸ்கோர் மிகப்பெரிய அளவில் உயர்வதற்கு காரணமாக அமைந்தார். அவர் 228 பந்துகளில் 169 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்.

இதற்கு அடுத்து பிரகாஷ் சதுர்வேதி அடுத்து வந்த கார்த்திகேயா உடன் இணைந்து 152 ரன்கள் பார்ட்னர்ஷிப் கொண்டு வந்தார். இந்த நேரத்தில் அவர் யுவராஜ் சிங் கூச் பெகார் டிராபியில் 24 வருடங்களுக்கு முன்பு ஏற்படுத்தியிருந்த இந்திய சாதனையை உடைத்தார்.

- Advertisement -

யுவராஜ் சிங் 358 ரன்கள் எடுத்திருந்தது சாதனையாக அமைந்திருந்தது. தொடர்ந்து விளையாடிய பிரகார் சதுர்வேதி சமித் ட்ராவிட் உடன் இணைந்து விளையாடி 400 ரன்களை கடந்து அசத்தினார்.

கூச் பெகார் டிராபியில் முதன் முதலில் நாற்சதம் அடித்த வீரர் என்கின்ற சாதனையை பிரகார் சதுர்வேதி படைத்தான். தற்பொழுது கர்நாடக அணி எட்டு விக்கெட் இழப்புக்கு 890 ரன்கள் முதல் இன்னிங்ஸில் எடுத்திருக்கிறது.

பிரகார் சதுர்வேதி மொத்தமாக 638 பந்துகளில் 46 பவுண்டரிகள் மற்றும் மூன்று சிக்ஸர்கள் உடன் 404 ரன்கள் குவித்து, மும்பை அணியை விட முதல் இன்னிங்ஸ் லீடிங் பெற்று விட்ட காரணத்தினால், கர்நாடக அணி கூச் பெகார் டிராபியை வெல்வதற்கு முக்கிய காரணமாக விளங்கி இருக்கிறார்.