அம்பதி ராயுடுவின் இடத்திற்கு ஐபிஎல் 2024-ல் சிஎஸ்கே வாங்க வாய்ப்பிருக்கின்ற 4 வீரர்கள்!

0
7644
CSK

நேற்று குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் 16வது சீசனின் இறுதிப்போட்டியோடு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் அம்பதி ராயுடு ஐபிஎல் தொடரிலிருந்து ஓய்வு பெற்று விட்டார்!

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பேட்டிங் யூனிட்டில் மிக முக்கியமான ரோலை ஏற்று செய்து வந்தவர் அம்பதி ராயுடு. மகேந்திர சிங் தோனி எந்த இடத்தில் அவரை பேட்டிங் செய்ய வைத்தாலும், அந்த இடத்தில் கேப்டனின் பேட்ஸ்மேனாக சிறப்பாக விளையாடியவர்.

- Advertisement -

இரண்டு ஆண்டு தடைக்காலத்திற்குப் பிறகு மீண்டு வந்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, 2018 ஆம் ஆண்டு சாம்பியன் பட்டத்தை வெல்ல துவக்க வீரராக முக்கியக் காரணமாக விளங்கியவர் அம்பதி ராயுடு.

தற்பொழுது இவரது வெற்றிடத்தைச் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கட்டாயம் நிரப்பியாக வேண்டும். மேலும் மகேந்திர சிங் தோனியும் ஓய்வு பெற இருப்பதால் சரியான வீரர்களைக் கண்டறிய வேண்டும். இந்த வகையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அம்பதி ராயுடு இடத்தில் வாங்க வாய்ப்பிருக்கின்ற நான்கு இந்திய வீரர்களை இந்த சின்ன கட்டுரைத் தொகுப்பில் பார்ப்போம்.

அபிமன்யு ஈஸ்வரன்:

- Advertisement -

பெங்கால் மாநில அணிக்காக விளையாடி வரும் 27 வயதான வலது கை பேட்ஸ்மேன் அபிமன்யு ஈஸ்வரன் தற்பொழுது இந்திய தேர்வுக் குழுவின் ரேடாரிலும் இருக்கிறார். உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்குப் பிறகு இவருக்கு இந்திய அணியில் விளையாடுவதற்கான வாய்ப்புகள் கிடைத்தால் ஆச்சரியப்படுவதற்கு இல்லை. மிடில் ஆர்டரில் வந்து அம்பதி ராயுடுவின் இடத்தில் விளையாட திறமை கொண்ட வீரராகவே இவர் இருக்கிறார்.

தினேஷ் பானா ;

மகேந்திர சிங் தோனியை ரோல் மாடலாக கொண்ட 18 வயதான வலது கை பேட்ஸ்மேன் ஆன இவர் ஒரு விக்கெட் கீப்பரும் கூட. கடைசியாக நடைபெற்ற அண்டர் 19 உலக கோப்பையை வென்ற அணியில் இடம் பிடித்திருந்தார். எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு விக்கெட் கீப்பராகவும் இருப்பதால், அம்பதி ராயுடு மற்றும் மகேந்திர சிங் தோனி இருவருக்கும் மாற்றாகவே இவரை வாங்கலாம்.

முகமது அசாருதீன் ;

கேரளாவைச் சேர்ந்த 29 வயதான வலது கை அதிரடி பேட்ஸ்மேன் இவர். மேலும் இவரும் விக்கெட் கீப்பிங் பேட்ஸ்மேன். எனவே இவரையும் தினேஷ் பானா போல சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் யோசிக்க அதிகப்படியான வாய்ப்புகள் இருக்கிறது.

பாபா இந்திரஜித் ;

தமிழக அணிக்காக பல முக்கிய இன்னிங்ஸ்களை ஆடிக்கொண்டிருக்கும் 28 வயதான வலது கை பேட்ஸ்மேன். திறமை மற்றும் அனுபவத்தின் அடிப்படையிலும், மேலும் தமிழக வீரருக்கு வாய்ப்பு தரப்படுவதில்லை என்கின்ற குற்றச்சாட்டைப் போக்கும் விதமாகவும் இவரை வாங்கவும் அதிகப்படியான வாய்ப்பு இருக்கிறது!