எப்படி இவங்களால மட்டும் முடியுது.. சிஎஸ்கேக்கு வந்த பிறகு கிரிக்கெட்டில் புது வாழ்க்கை பெற்ற 4 வீரர்கள்

0
6323

கிரிக்கெட் உலகத்திலேயே மிகச்சிறந்த அணி என்றால் அது சென்னை சூப்பர் கிங்ஸ் தான் என ரசிகர் மட்டுமல்லாமல் அதில் விளையாடிய வீரர்கள் கூட சொல்லி இருக்கிறார்கள். 2008 ஆம் ஆண்டு முதல் இந்த அணி ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி வருகிறது.

அதிக முறை ஐபிஎல் இறுதிச்சுற்றுக்கு சென்ற அணி, ஐந்து முறை கோப்பையை வென்ற அணி என்ற பல பெருமைகளை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி படைத்திருக்கிறது. இந்த அணியின் சிறப்பு அம்சமே கிரிக்கெட் வாழ்க்கை முடிந்துவிட்டது என கருதப்படும் வீரர்கள் கூட சி எஸ் கேக்கு வந்தால் புத்துணர்ச்சி பெற்று மீண்டும் களத்தில் ஜொலிப்பார்கள்.

- Advertisement -

இதன் மூலம் பல வீரர்கள் சர்வதேச கிரிக்கெட்டுக்கு கம்பேக் கொடுத்திருக்கிறார்கள். இதற்குக் காரணம் தோனி எப்படி அனைத்து வீரர்களையும் சிறப்பாக வேலை வாங்குவது என்ற நுட்பத்தை தெரிந்து வைத்திருக்கிறார். அணி நிர்வாகமும் அவ்வளவு மரியாதை கொடுப்பதால் சிஎஸ்கே அணி வீரர்கள் இதனை ஒரு குடும்பமாக பார்க்கிறார்கள்.

இந்த நிலையில் இந்த அணிக்கு வந்து கிரிக்கெட்டில் புது வாழ்வு பெற்ற நான்கு வீரர்கள் குறித்து தற்போது பார்க்கலாம். இந்தப் பட்டியலில் தற்போது முதலாவது இடம் பிடித்திருப்பவர் ரஹானே. ரஹானேக்கு கடந்த சில காலமாக கிரிக்கெட் வாழ்க்கை படுமோசமாக அமைந்தது. ஐபிஎல் 2020 மற்றும் 2021, 22 ஆகிய தொடர்களில் ரஹானே எந்த ஒரு தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை.

இதற்கு மேலாக இந்திய டெஸ்ட் அணியில் தனது இடத்தை இழந்தார். பலரும் ரகானே மீது நம்பிக்கை இழந்த நிலையில் சிஎஸ்கே அணி அவரை ஏலத்தில் எடுத்தது. அதற்கு முன்பு வரை தடுமாறிக் கொண்டிருந்த ரகானே சிஎஸ்கே அணிக்கு வந்தவுடன் வேற லெவலில் களத்தில் செயல்பட்டார்.

- Advertisement -

இதன் மூலம் தற்போது இந்திய அணியில் மீண்டும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. இந்த பட்டியலில் இரண்டாவது இடம் பிடித்திருப்பவர் வேகப்பந்துவீச்சாளர் நெஹ்ரா. வயது மூப்பு மற்றும் காயம் காரணமாக நெஹ்ரா இந்திய அணியில் இடம் கிடைக்காமல் தடுமாறி வந்தார்.

ஆனால் ஐபிஎல் இல் 2014 மற்றும் 15ஆம் தேதி சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக நெஹ்ரா விளையாடினார். இதில் சிறப்பாக செயல்பட்டதை அடுத்து 2016 டி20 உலக கோப்பையில் நெஹ்ராவுக்கு இடம் கிடைத்தது. இந்த பட்டியலில் மூன்றாவது இடத்தை பிடித்திருப்பவர் அம்பத்தி ராயுடு, 2018 ஆம் ஆண்டு மும்பை அணியிலிருந்து சிஎஸ்கேவுக்கு  ராயுடு வந்தார்.

- Advertisement -

சிஎஸ்கே அணியில் சிறப்பாக செயல்பட்டதன் மூலம் இந்திய அணியில் ராயுடுவுக்கு விளையாட வாய்ப்பு கிடைத்தது. இந்த பட்டியலில் நான்காவது இடம் பிடித்தவர் ஜடேஜா. 2009 ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் ஜடேஜா அடியெடுத்து வைத்தார்.ஆனால் அதன் பிறகு சரி வர விளையாட வில்லை என்று கூறி 2011 உலக கோப்பையில் அவர் விளையாட முடியாத நிலை ஏற்பட்டது.

இந்த நிலையில் 2012 ஆம் ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஜடேஜாவை தேர்வு செய்தது. அதன் பிறகு இந்திய அணியின் முக்கிய விரலாக ஜடேஜா திகழ்ந்து வருகிறார். 2013 ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியதற்காக தங்க பந்து அவருக்கு பரிசாக வழங்கப்பட்டது.