3வது டெஸ்ட்.. சர்பராஸ் கான் விளையாட வாய்ப்பு இருக்கிறதா?.. இந்திய அணி எப்படி அமையும்?

0
150
Sarfaraz

இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையே மூன்றாவது டெஸ்ட் போட்டி பிப்ரவரி 13-ஆம் தேதி ராஜ்கோட் சௌராஷ்டிரா கிரிக்கெட் அசோசியேஷன் மைதானத்தில் துவங்குகிறது.

கடைசி மூன்று போட்டிகளுக்கான இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது. ஏற்கனவே இருந்த அணியில் இருந்து ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் ஆவேஷ் கான் வெளியேற்றப்பட்டு இருக்கிறார்கள்.

- Advertisement -

அதே சமயத்தில் ரவீந்திர ஜடேஜா, கேஎல்.ராகுல், முகமது சிராஜ், ஆகாஷ் தீப் ஆகியோர் வந்திருக்கிறார்கள். இந்திய டெஸ்ட் அணியில் முதல் வாய்ப்பு கொடுக்கப்பட்ட ரஜத் பட்டிதார் மற்றும் சர்ப்ராஸ் கான் இருவரும் அணியில் தொடர்கிறார்கள்.

ஸ்ரேயாஸ் ஐயர் முதுகு பகுதியில் ஏற்பட்டிருக்கும் பழைய காயத்தின் காரணமாக வெளியேறி இருப்பதாக கூறப்படுகிறது. இப்படி இல்லையென்றாலும் அவர் நீக்கப்படுவதற்கான வாய்ப்பு தான் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இரண்டாவது டெஸ்ட் போட்டியை விளையாடிய இந்திய அணியில் ஸ்ரேயாஸ் ஐயர் இடத்தில் கே எல் ராகுல் விளையாடுவார். குல்தீப் இடத்தில் ரவீந்திர ஜடேஜா விளையாடவே அதிக வாய்ப்பு இருக்கிறது. முகேஷ் குமார் இடத்தில் முகமது சிராஜ் களமிறங்குவார்.

- Advertisement -

இந்த அணியில் சர்பராஸ் கான் விளையாட வேண்டும் என்றால் ஒரே ஒரு வேகப்பந்து வீச்சாளர் மட்டுமே இந்திய அணியில் விளையாட வேண்டும். இல்லையென்றால் வீரர்கள் யாராவது காயம் அடைந்தால்தான் உண்டு.

எனவே மூன்றாவது டெஸ்ட் போட்டியில் சர்ப்ராஸ்கான் தன்னுடைய முதல் சர்வதேச டெஸ்ட் அறிமுகத்தை பெறுவதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவாகவே இருக்கிறது.

இதையும் படிங்க : “U19 உலககோப்பையை பிசிசிஐ நடத்தாமல் இருப்பதற்கு காரணம் இதுதான்” – உண்மையை உடைத்த சவுரவ் கங்குலி

ரஜத் பட்டிதாருக்கு இன்னும் இரண்டு வாய்ப்புகள் கொடுக்கப்பட்டு, அதை அவர் பயன்படுத்திக் கொள்ளாத பொழுதும், இல்லை இரண்டு டெஸ்ட் போட்டிகளை தொடர்ந்து இந்திய அணி வென்று தொடரை கைப்பற்றினாலும், கடைசி டெஸ்ட் போட்டியில் சர்பராஸ் கான் இடம் பெறுவதற்கு வாய்ப்புகள் உண்டு.