3வது டி20 போட்டி நிறுத்தம்.. கிரிக்கெட் வரலாற்றில் மோசமான அலட்சியம்.. வெ.இ வாரியம் திருந்தவே இல்லை!

0
1003
Indvswi2023

வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணம் செய்துள்ள இந்திய ஆண்கள் கிரிக்கெட் அணி தற்போது ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது!

இந்தத் தொடரில் இரண்டு டி20 போட்டிகள் நடைபெற்று இருக்க அந்த இரண்டிலும் இந்திய அணி மிக மோசமாக விளையாடி வெஸ்ட் இண்டீஸ் அணியிடம் தோற்று தொடரை மிகவும் பரபரப்பாக்கி இருக்கிறது.

- Advertisement -

இந்த நிலையில் இன்று இந்த தொடரில் இந்திய அணிக்கு வாழ்வா சாவா என்ற மூன்றாவது டி20 போட்டி நடைபெறுகிறது. இந்த போட்டியில் இசான் கிஷான் நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக இந்திய டி20 கிரிக்கெட் அணியில் ஜெய்ஸ்வால் அறிமுகப்படுத்தப்பட்டு இருக்கிறார்.

இந்த போட்டிக்கான டாசில் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி இந்த முறை எதையும் யோசிக்காமல் தைரியமாக முதலில் பேட்டிங்கை தேர்வு செய்திருக்கிறது. இரண்டு போட்டிகளில் அதிரடியாக வென்றதின் காரணமாக வெஸ்ட் இண்டிஸ் அணியின் நம்பிக்கையும் தைரியமும் அதிகரித்து இருப்பதை இது காட்டுகிறது.

டாஸ் முடிவுக்குப் பிறகு இரு அணி வீரர்களும் களத்திற்குள் வர, அங்கே ஒரு வித்தியாசமான அதிர்ச்சி இரு அணி வீரர்களுக்கும் காத்திருந்தது. இதுவரை உலக கிரிக்கெட்டில் இப்படி ஒன்று நடந்திருக்குமா என்கின்ற அளவுக்கு அது இருந்தது.

- Advertisement -

அது என்னவென்றால், வெள்ளைப் பந்து கிரிக்கெட்டில் 30 யார்டு தூரத்துக்கு உள்வட்டம் ஒன்று வரையப்பட்டு இருக்கும். ஏனென்றால் இந்த உள்வட்டத்திற்குள் பவர் பிளேவில் இத்தனை வீரர், பவர் பிளே முடிந்து இத்தனை வீரர் என்று அளவு நிர்ணயிக்கப்பட்டிருக்கும். எனவே இதற்காக அந்த உள்வட்டத்தின் தேவை உண்டு. இன்றைய போட்டியில் மைதானத்தில் அப்படியான 30 யார்டு உள்வட்டம் வரையப்படவில்லை. இதை அடுத்து களத்திற்குள் வந்த வீரர்கள் ஏமாற்றமாக வெளியே திரும்பினார்கள்.

கடந்த வெஸ்ட் இண்டிஸ் சுற்றுப்பயணத்தின் போது இந்திய அணி வீரர்களின் லக்கேஜ் வருவதில் மிகப்பெரிய சிரமம் ஏற்பட்டு பெரிய தொந்தரவுக்கு உள்ளானார்கள். இந்த முறை இரவில் விமான நிலையத்தில் தேவையில்லாமல் காக்க வைக்கப்பட்டு, இந்திய வீரர்கள் அதிகாலையில் ஹோட்டல் திரும்பும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்டார்கள். இதுகுறித்து அணியின் கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரும் இந்திய அணி நிர்வாகத்துக்கு புகார் அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஒருநாள் கிரிக்கெட் தொடர் முடிந்த பொழுது இது குறித்து இந்திய அணியின் கேப்டன் ஹரிதிக் பாண்டியா பேசி இருந்தார். தற்பொழுது இப்படி ஒரு அலட்சியமான காரியம் நடைபெற்று இருக்கிறது. ஒரு சர்வதேச போட்டியில், ஒரு மிகப்பெரிய அணி கலந்து கொள்ளும் நிலையில் இப்படியான விஷயங்கள் மோசமானவை ஆகும்!