34 வருடத்தில் 3வது வீரர்.. எலைட் லிஸ்டில் ஜெய்ஸ்வால்.. உடைய போகும் மெகா ரெக்கார்ட்ஸ்

0
512
Jaiswal

நடைபெற்றுக் கொண்டிருக்கும் இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடர், இந்திய கிரிக்கெட்டுக்கு அடுத்த பத்து ஆண்டுகளாவது சூப்பர் ஸ்டாராக விளங்கப் போகும் வியர்வை அடையாளம் காட்டி இருக்கிறது.

இந்திய அணிக்கு நீண்ட நாட்கள் கழித்து இடது கை துவக்க ஆட்டக்காரராக கிடைத்திருக்கும் ஜெய்ஸ்வால் இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் மிக பிரம்மாண்டமான பேட்டிங்கை வெளிப்படுத்தி வருகிறார்.

- Advertisement -

நான்காவது டெஸ்ட் போட்டிக்கு முன்பாக மூன்று போட்டிகள் மற்றும் 6 இன்னிங்ஸ்களில் விளையாடி மொத்தம் 545 ரன்கள் குவித்திருக்கிறார். இதில் இரண்டு அட்டகாசமான இரட்டை சதங்கள் அடக்கம்.

ஒவ்வொரு ஆடுகளத்திற்கும் தகுந்தது போல் அவருடைய பேட்டிங்கை அவர் மாற்றி அமைத்துக் கொள்கிறார். அதிரடியாக விளையாடுவது மட்டுமே தன்னுடைய பணி என்று அதற்குள் தன்னை சுருக்கிக் கொள்வது கிடையாது. இதன் காரணமாக அவர் தன்னை முழுமையான சாம்பியன் பேட்ஸ்மேன் ஆக வெளிப்படுத்துகிறார்.

இந்த நிலையில் நான்காவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 353 ரன்கள் எடுத்திருக்க, இந்திய அணி 131 ரன்களுக்கு நான்கு விக்கெட்டை இழந்து இருக்க, இந்த போட்டியிலும் ஆட்டம் இழக்காமல் தற்பொழுது ஜெய்ஸ்வால் அரை சதம் அடித்திருக்கிறார். அவருடைய சிறப்பான பேட்டிங் மேலும் நெருக்கடியான நேரத்தில் தொடர்கிறது.

- Advertisement -

இன்று பேட்டிங்கில் 55 ரன்கள் ஜெய்ஸ்வால் எட்டிய பொழுது, 1990 ஆம் வருடத்திற்கு பிறகு ஒரு டெஸ்ட் கிரிக்கெட் தொடரில், 600 ரன்களை எட்டும் 3து பேட்ஸ்மேன் என்ற பெரிய சாதனையை படைத்திருக்கிறார்.

இவருக்கு முன்பாக ராகுல் டிராவிட், மற்றும் விராட் கோலி இருவர் இதை செய்திருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

1990 ஆம் வருடத்திற்கு பிறகு டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் இந்திய அணிக்கு 600 ரன்களுக்கு மேல் குவித்தவர்கள்.

692 – விராட் கோலி vs AUS (2014)
655 – விராட் கோலி vs ENG (2016)
619 – ராகுல் டிராவிட் vs AUS (2003)
610 – விராட் கோலி vs SL (2017)
602 – ராகுல் டிராவிட் vs ENG (2002)

இதையும் படிங்க : ரோகித் செய்ய வேண்டியதை செய்த ஸ்டோக்ஸ்.. மீண்டும் காப்பாற்றும் ஜெய்ஸ்வால்.. புதிய சாதனை நோக்கி பயணம்

மேலும் 1971ஆம் ஆண்டு வெஸ்ட் இண்டிஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் இந்திய வீரர் சுனில் கவாஸ்கர் 774 ரன்கள், மீண்டும் அதே வெஸ்ட் இண்டிஸ் அணிக்கு எதிராக 1978ஆம் ஆண்டு 732 ரன்கள் என எடுத்தது, ஒரு டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் இந்தியா பேட்ஸ்மேன் எடுத்த அதிகபட்ச ரன்னாக பதிவாகி இருக்கிறது. கவாஸ்கர் மற்றும் விராட் கோலி சாதனைகளை முறியடிப்பதற்கான அதிகபட்ச வாய்ப்பில் ஜெய்ஸ்வால் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.