3 மேட்ச் முடிவில் யார் பெஸ்ட் இம்பேக்ட் பீல்டர்? ஐசிசி வெளியிட்ட டாப் 10 பட்டியல்.. ஜடேஜா இல்லை!

0
1621
Virat

இந்தியாவில் நடைபெற்று வரும் ஒரு நாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் தற்பொழுது சூடு பிடிக்க ஆரம்பித்திருக்கிறது. ஏறக்குறைய எல்லா அணிகளும் தங்களின் மூன்று போட்டிகளை விளையாடி முடிக்கின்றன.

இந்த நிலையில் நாளை இந்திய அணி தன்னுடைய நான்காவது போட்டியில் மகாராஷ்டிரா புனே மைதானத்தில் பங்களாதேஷ் அணியை எதிர்த்து விளையாடுகிறது.

- Advertisement -

சமீபத்தில் நடந்து முடிந்த ஆசிய கோப்பை தொடரில் பங்களாதேஷ் அணிக்கு எதிராக இந்திய அணி தோல்வி அடைந்திருந்தது. மேலும் பங்களாதேஷ் அணி இந்திய சூழ்நிலையில் சரியாக செயல்படுவதற்கான வீரர்களைக் கொண்டு இருக்கிறது. எனவே இந்திய அணி எச்சரிக்கையுடன் களமிறங்கும்.

தற்பொழுது 3 ஆட்டங்கள் மொத்தமாக எல்லா அணிகளுக்கும் முடிந்திருக்கும் வேளையில், ஐசிசி ஃபீல்டிங்கில் தாக்கம் தந்த வீரர்கள் என்ற முதல் பத்து வீரர்களின் பட்டியலை வெளியிட்டு இருக்கிறது. இந்த பட்டியலில் உலகத்தின் மிகச் சிறந்த பீல்டர்களில் ஒருவரான ரவீந்திர ஜடேஜா பெயர் இல்லை.

அதே சமயத்தில் இந்திய அணியில் இருந்து விராட் கோலி இந்த பட்டியலில் இடம் பிடித்திருக்கிறார். மேலும் தாக்கம் நிறைந்த பீல்டர் பட்டியலில் இந்த மூன்று போட்டிகளில் சேர்த்து அவருக்கே முதலிடம் கிடைத்திருக்கிறது.

- Advertisement -

மேலும் இந்திய அணியில் இஷான் கிஷான் பத்தாவது இடத்தை பிடித்திருக்கிறார். இந்த பட்டியலில் இந்திய வீரர்களான இவர்கள் இருவர் இருக்கிறார்கள்.

ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, பாகிஸ்தான் ஆகிய நாடுகளைச் சேர்ந்த இரண்டு வீரர்கள் இந்த பட்டியலில் இருக்கிறார்கள். மற்ற சில அணிகளில் இருந்து ஒரு வீரர்கள் இடம் பெற்று இருக்கிறார்கள்.

உலகக்கோப்பை முதல் மூன்று போட்டிகளில் தாக்கம் நிறைந்த பீல்டர்கள் டாப் 10 வரிசை :

விராட் கோலி 22.30
ஜோ ரூட் 21.73
டேவிட் வார்னர் 21.32
டெவான் கான்வே 15.54
சதாப் கான் 15.13
மேக்ஸ்வெல் 15
ரஹமத் ஷா 13.7
சான்ட்னர் 13.2
பகார் ஜமான் 13.1
இஷான் கிஷான் 13