2022 டி20 உலக கோப்பைக்கு பிறகு இந்திய அணியில் இருந்து காணாமல் போன 3 வீரர்கள்

0
5397

2023 ஆம் ஆண்டிற்கான உலகக் கோப்பை போட்டிகள் இந்தியாவில் வைத்து நடைபெற இருக்கிறது . இந்தப் போட்டிகளுக்கான அட்டவணையை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் நேற்று அதிகாரப்பூர்வமாக வெளியிட்டது .

வருகின்ற அக்டோபர் மாதம் 05 ஆம் தேதி துவங்கி நவம்பர் மாதம் 19 ஆம் தேதி வரை நடைபெற இருக்கும் உலகக்கோப்பை போட்டிகளில் மொத்தம் 48 போட்டிகள் நடைபெற இருக்கின்றன . இந்த உலகக்கோப்பை ஆனது 46 நாட்கள் இந்தியாவில் வைத்து நடைபெற இருக்கிறது .முதல்முறையாக இந்தியா மட்டுமே நடத்தும் உலகக் கோப்பை போட்டி இதுவாகும்.

- Advertisement -

2011 ஆம் ஆண்டின் உலகக்கோப்பை வெற்றிக்குப் பிறகு 2015 மற்றும் 19 ஆம் ஆண்டுகளில் 50 ஓவர் உலகக் கோப்பையின் இறுதி போட்டிகளில் இந்தியா தோல்வியை தழுவியது மேலும் 2013 ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபி வெற்றிக்குப் பிறகு 2017 ஆம் ஆண்டு சாம்பியன் டிராபி இறுதிப் போட்டியில் பாகிஸ்தான் அணியுடன் தோல்வியை தழுவியது . மேலும் 2014 2016 2021 மற்றும் 2022 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற டி20 உலக கோப்பை போட்டிகளிலும் தோல்வியை சந்தித்தது .

இந்திய அணி ஐசிசி கோப்பையை வென்று பத்து வருடங்கள் ஆவதால் இந்தியாவில் நடைபெறும் இருக்கும் இந்த 50 ஓவர் உலகக் கோப்பையை கைப்பற்ற தீவிரமாக முயற்சிகளை செய்து வருகிறது . குறிப்பிட்ட வீரர்களை மட்டும் தேர்ந்தெடுத்து அவர்களுக்கு அதிகமான போட்டிகளில் விளையாட வாய்ப்பு கொடுத்து அவற்றிலிருந்து உலக கோப்பையில் விளையாட இருக்கும் 15 வீரர்களை தேர்ந்தெடுக்க இருக்கிறது .

இதேபோன்று 2022 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பை போட்டிகளுக்காக குறிப்பிட்ட வீரர்களை தேர்ந்தெடுத்து அவற்றில் இருந்து 15 பேர் கொண்ட அணியை தேர்வு செய்தது இந்தியா . ஆனாலும் அந்த உலகக் கோப்பை போட்டியில் அரையறுதியில் தோல்வியை தழுவியது . அந்த அணியில் இடம் பெற்ற மூன்று வீரர்கள் அதன் பிறகு இந்திய அணிக்காக தேர்வு செய்யப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது . அந்த வீரர்கள் யார் என்று பார்ப்போம் .

- Advertisement -

தினேஷ் கார்த்திக்:
இந்திய அணியின் அனுபவமிக்க விக்கெட் கீப்பரான தினேஷ் கார்த்திக் 2022 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரின் போது சிறப்பாக செயல்பட்டதால் டி20 உலக கோப்பை காண இந்திய அணியில் விக்கெட் கீப்பராக தேர்வு செய்யப்பட்டார் . அந்தத் தொடரில் நான்கு போட்டிகளில் விளையாடிய அவர் 14 ரன்கள் மட்டுமே எடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது . அதன்பிறகு காயம் காரணமாக அணியில் இருந்து விலகிய அவர் மீண்டும் இந்திய அணிக்கு திரும்பவே இல்லை . தற்போது வர்ணனையாளராக பணியாற்றி வருகிறார் .

தீபக் ஹூடா:
வெள்ளை பந்து கிரிக்கெட் வடிவத்தில் 2022 ஆம் ஆண்டு ஐபிஎல் போட்டிகளிலும் இந்தியா அணிக்காகவும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியவர் தீபக் ஹூடா. விராட் கோலி டி20 போட்டிகளில் ஓய்வு எடுத்த போது அவருக்கு பதிலாக மூன்றாவது இடத்தில் இறங்கி விளையாடிய ஹூடா அயர்லாந்து அணிக்கு எதிராக சதம் எடுத்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது . 2022 ஆம் ஆண்டு உலகக்கோப்பை அணியில் இடம் பெற்ற அவர் தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான ஒரு போட்டியில் விளையாடி சொற்பரன்களில் ஆட்டம் இழந்தார் . இந்த வருட ஐபிஎல் தொடரிலும் மோசமான ஆட்டத்தையே வெளிப்படுத்தி இருக்கிறார் . அவரும் இந்திய அணியில் தொடர்வது சந்தேகமே.

புவனேஸ்வர் குமார் :
வெள்ளைப் பந்து கிரிக்கெட் வடிவத்தில் இந்திய அணியின் பிரதான வேகப்பந்துவீச்சாளராக விளங்கியவர் புவனேஸ்வர் குமார் . கடந்த வருட டி20 உலக கோப்பையில் இந்தியா விளையாடிய அனைத்து போட்டிகளிலும் ஆடிய இவர் நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தார். இவரது எக்கனாமிக் 6.16. உலகக் கோப்பை போட்டிக்கு பிறகு இந்திய அணியின் டி20 மற்றும் 50 ஓவர்கள் அணியில் இவர் இடம் பெறவில்லை இதன் பிறகும் இவருக்கு வாய்ப்புகள் வழங்கப்படாது என்றே தெரிகிறது . இந்திய அணிக்காக 21 டெஸ்ட் போட்டிகளில் ஆடி இருக்கும் இவர் 63 விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார் . மேலும் 121 ஒரு நாள் போட்டிகள் மற்றும் 87 டி20 சர்வதேச போட்டிகளில் விளையாடியிருக்கும் புவனேஸ்வர் குமார் முறையே 141 மற்றும் 90 விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார் .