2வது டெஸ்ட்.. இலங்கையை சுருட்டி கொழும்பு மைதானத்தில் 30 வருட வரலாற்றை மாற்றி எழுதிய பாகிஸ்தான்!

0
2454
Sl vs Pak

பாகிஸ்தான் ஆண்கள் கிரிக்கெட் அணி இலங்கை நாட்டிற்கு சுற்றுப்பயணம் செய்து தற்போது இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது!

இந்தத் தொடரில் இலங்கை அணிக்கு மிகவும் வெற்றிகரமான காலே மைதானத்தில் நடைபெற்ற முதல் போட்டியில், சவுத் சகீல் இரட்டை சதத்துடன் பாகிஸ்தான் அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் முன்னிலை வகித்தது.

- Advertisement -

இந்த நிலையில் தொடரின் கடைசி மற்றும் இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இன்று கொழும்பு எஸ் எஸ் சி மைதானத்தில் துவங்கியது. இந்தப் போட்டிக்கான டாசில் வென்ற இலங்கை முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.

இந்த முறையும் இலங்கை அணியின் துவக்க ஆட்டக்காரர்களான கேப்டன் கருணரத்னே மற்றும் நிஷான் மதுஷ்கா இருவரும் 17 மற்றும் நான்கு ரன்களில் வெளியேறி ஏமாற்றம் அளித்தார்கள். இதற்கு அடுத்து வந்த குசால் மெண்டிஸ் மற்றும் அனுபவ வீரர் ஆஞ்சலோ மேத்யூஸ் இருவரும் 6 மற்றும் 9 ரண்களில் வெளியேறி இலங்கை அணிக்கு மேலும் நெருக்கடியை உண்டாக்கினார்கள்.

இப்படியான நிலையில் ஜோடி சேர்ந்த தினேஷ் சண்டிமால் மற்றும் இந்த டெஸ்ட் தொடரில் மிகச் சிறப்பாக பேட்டிங்கில் செயல்பட்டு வரும் தனஞ்செய டி சில்வா இருவரும் பொறுப்பாக விளையாடிய சரிவில் இருந்து கொஞ்சம் மீட்டார்கள். ஆனாலும் இது அதிக நேரம் நீடிக்கவில்லை. தினேஷ் சண்டிமால் 34, தனஞ்செய டி சில்வா 57 ரன்களில் வெளியேறினார்கள்.

- Advertisement -

இதற்கடுத்து சதிர சமரவிக்ரம 0, ரமேஷ் மெண்டிஸ் 27, பிரபாத் ஜெயசூர்யா 1, அசிதா பெர்னாடோ 8, தில்சன் மதுசங்கா 0* என ரன்கள் எடுக்க 48 புள்ளி நான்கு ஓவர்களில் 166 ரன்களுக்கு இலங்கை அணி சுருண்டது.

பாகிஸ்தான் தரப்பில் அப்ரார் அகமது 4 விக்கெட்டுகள், நதீம் ஷா 3 விக்கெட்டுகள், ஷாஹீன் ஷா அப்ரிடி 1 விக்கெட் வீழ்த்தினார்கள். இலங்கை தரப்பில் இரண்டு ரன் அவுட் ஆகி இருந்தது பின்னடைவில் குறிப்பிடத் தகுந்த ஒரு விஷயம்.

இலங்கை அணி கொழும்பு மைதானத்தில் இதற்கு முன்பாக 1993ஆம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக 168 ரன்கள் முதல் இன்னிங்ஸில் எடுத்ததே மிகக்குறைந்தபட்ச ரன்னாக இலங்கை அணிக்கு பதிவாகி இருந்தது. தற்பொழுது அதை 30 ஆண்டுகளுக்குப் பிறகு பாகிஸ்தான் அணி மாற்றி எழுதி இருக்கிறது!

கடந்த ஆட்டத்தில் பாகிஸ்தான் தரப்பில் தங்களது பேட்டிங் இனி மெதுவாக இருக்காது இங்கிலாந்து போல மிக வேகமாகத்தான் ரன்களை எடுப்போம் என்று கூறியிருந்தார்கள். இந்த நிலையில் இரண்டாவது போட்டியை பாகிஸ்தான் அணி பேட்டிங்கில் எப்படி அணுகுகிறது என்பது சுவாரசியமான ஒன்றாக இருக்கும்.