இந்த ஆண்டு நடைபெற இருக்கும் ஐபிஎல் மெகா ஏலத்தில் மொத்தம் 23 இந்திய வீரர்கள் தங்களுடைய அடிப்படை விலையாக 2 கோடி ரூபாயை நிர்ணயித்து இருக்கிறார்கள்.
அடுத்த ஆண்டு 2025 இல் நடக்க இருக்கும் ஐபிஎல் தொடர் நடைபெறுகிறது. இதில் கலந்து கொள்ளும் வீரர்களின் எண்ணிக்கை மற்றும் ஏலம் நடக்கும் இடம், தேதி ஆகியவை இன்று இந்திய கிரிக்கெட் வாரியத்தால் அறிவிக்கப்பட்டிருக்கிறது.
இந்த முறை ஐபிஎல் மெகா ஏலம் சவுதி அரேபியாவின் ஜெட்டா நகரில் நடைபெறுகிறது. மேலும் இந்திய அணி ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக பெர்த் மைதானத்தில் முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடிக் கொண்டிருக்கும் பொழுது, நவம்பர் 24 மற்றும் 25ஆம் தேதிகளில் இந்த மெகா ஏலம் நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் இந்த ஐபிஎல் மெகா ஏலத்திற்கு ஒட்டுமொத்தமாக 1574 வீரர்கள் தங்களது பெயரை பதிவு செய்திருக்கிறார்கள். ஆனால் பத்து அணிகளுக்கும் சேர்த்து மொத்தமாகவே 204 வீரர்கள் மட்டுமே தேவைப்படுகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் ஐபிஎல் தொடர் உலக அளவில் எவ்வளவு பிரபலமடைந்திருக்கிறது என்பதை புரிந்து கொள்ளலாம்.
இந்த ஐபிஎல் மெகா ஏலத்தில் அதிகபட்ச அடிப்படை விலையான இரண்டு கோடி ரூபாய்க்கு 23 இந்திய வீரர்கள் தங்களது பெயரை பதிவு செய்திருக்கிறார்கள். இதில் ரிஷப் பண்ட், கேஎல்.ராகுல், ஸ்ரேயாஸ் ஐயர் ஆகியோர் மிக முக்கிய வீரர்களாக பார்க்கப்படுகிறார்கள். மேலும் 2 கோடி ரூபாய்க்கு தங்களது பெயரை கொடுத்திருக்கும் இந்த 23 வீரர்களும்தான், நடக்க இருக்கும் மெகா ஏலத்தை சுவாரசியப்படுத்த கூடியவர்களாகவும் இருப்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : ஆஸி கூக்கபுரா பந்தில் வேற ரோகித்தை பாப்பிங்க.. இப்படி ஒரு காரணம் இருக்கு – இந்திய முன்னாள் பீல்டிங் கோச் ஸ்ரீதர் பேட்டி
அடிப்படை விலை 2 கோடி இந்திய வீரர்கள் :
கேஎல்.ராகுல், ரிஷப் பந்த், ஸ்ரேயாஸ் ஐயர், ரவிச்சந்திரன் அஷ்வின், யுஸ்வேந்திர சாஹல், முகமது ஷமி, கலீல் அகமத், தீபக் சாஹர், வெங்கடேஷ் ஐயர், அவேஷ் கான், இஷான் கிஷான், முகேஷ் குமார், புவனேஸ்வர் குமார், பிரசித் கிருஷ்ணா, நடராஜன், தேவ்தத் படிக்கல், க்ருனால் பாண்டியா, ஹர்ஷல் படேல், அர்ஷ்தீப் சிங், வாஷிங்டன் சுந்தர், ஷர்துல் தாகூர், முகமது சிராஜ் மற்றும் உமேஷ் யாதவ்.