22 ரன்கள் பின்னிலை.. ஆனாலும் டிக்ளேர் செய்த ஆஸி.. வெஸ்ட் இண்டீஸ்க்கு வரலாற்று வெற்றிக்கு வாய்ப்பு

0
360
AUSvsWI

தற்பொழுது ஆஸ்திரேலியா வெஸ்ட் இண்டீஸ் நாடுகள் ஆஸ்திரேலியாவில் மோதிக் கொள்ளும் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது.

இந்த தொடரின் முதல் போட்டியில் ஆஸ்திரேலியா பத்து விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த நிலையில் தொடரின் இரண்டாவது மற்றும் இறுதி டெஸ்ட் போட்டி நேற்று முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது.

- Advertisement -

இதில் முதலில் தாசில் வெற்றி பெற்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பேட்டிங் தேர்வு செய்தது. முதல் ஐந்து விக்கெட் வேகமாக விழுந்து விட, கெவிம் ஹாட்ஜ் 71, ஜோசுவா டி சில்வா 79, கெவின் சின்ளேயர் 50, அல்சாரி ஜோசப் 32 ரங்கள் எடுக்க வெஸ்ட் இண்டீஸ் முதல் இன்னிங்ஸில் 311 ரன்கள் சேர்த்தது. ஸ்டார்க் 4 விக்கெட் கைப்பற்றினார்.

தொடர்ந்து தனது முதல் இன்னிங்ஸ் விளையாடிய ஆஸ்திரேலியா அணி 24 ரன்களுக்கு நான்கு விக்கெட்டுகளை இழந்துவிட்டது. இதற்குப் பிறகு ஆஸ்திரேலியாவிற்கு துவக்க ஆட்டக்காரர் உஸ்மான் கவஜா 75, அலெக்ஸ் கேரி 65, கேப்டன் கம்மின்ஸ் ஆட்டம் இழக்காமல் 64 ரன்கள் எடுக்க, ஒன்பது விக்கெட்டுகள் இழப்புக்கு 289 ரன்கள் எடுத்து, 22 ரன்கள் பின் தங்கிய நிலையில் ஆஸ்திரேலியா டிக்ளர் செய்து ஆச்சரியப்படுத்தியது.

தற்பொழுது நடந்து வரும் டெஸ்ட் போட்டி பகல் இரவு டெஸ்ட் போட்டி ஆகும். எனவே இதை மனதில் வைத்து இரவில் பந்து நன்றாக ஸ்விங் ஆவதை பயன்படுத்திக் கொள்வதற்காக இப்படி 22 ரன்கள் பின்தங்கிய நிலையிலேயே ஆஸ்திரேலியா புத்திசாலித்தனமாக டிக்ளேர் செய்துவிட்டது.

- Advertisement -

இதில் மொத்தம் ஏழு ஓவர்கள் பந்து வீசிய ஆஸ்திரேலியா சந்தர்பால் விக்கெட்டை கைப்பற்றியும் விட்டது. தற்பொழுது 13 ரன்கள் எடுத்து மொத்தம் 33 ரன்கள் முன்னிலையுடன், கைவசம் ஒன்பது விக்கெட்டுகளை வெஸ்ட் இண்டிஸ் அணி வைத்திருக்கிறது. முதல் இன்னிங்ஸ் போலவே வெஸ்ட் இண்டீஸ் நாளையும் விளையாடினால், ஒரு அற்புதமான சிறப்பானசாதனை காத்திருக்கிறது.

இதையும் படிங்க : “நாங்க நேற்று ஒரு பிளான் பண்ணோம்.. இப்ப எனக்கு ஒரு நல்லது நடந்திருக்கு” – கேஎல்.ராகுல் பேட்டி

என்னவென்றால், இதுவரையில் பகல் இரவு டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா அணி தோற்றதே கிடையாது என்கின்ற பெருமையுடன் வலம் வந்து கொண்டிருக்கிறது. இதற்கு வெஸ்ட் இண்டிஸ் அணியாள் முற்றுப்புள்ளி வைக்கப்படும். மேலும் ஆஸ்திரேலியா மாதிரியான ஒரு அணியை அவர்களது நாட்டிலேயே டெஸ்ட் கிரிக்கெட்டில் தோற்கடித்தால், அது சரிந்திருக்கும் வெஸ்ட் இண்டிஸ் கிரிக்கெட்டுக்கு மிகவும் புத்துணர்ச்சியாக அமையும் என்பது குறிப்பிடத்தக்கது.