203 ரன்.. WPL பைனல்.. வெளுத்துக்கட்டிய ஸ்மிருதி மந்தனா.. 2வது ஆர்சிபி சாம்பியன்.. டெல்லி கேப்பிடல்ஸ் சோகம்

0
2
RCB

நேற்று மகளிர் ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்று ஆர்சிபி அணி இரண்டாவது முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆர்சிபி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இந்த அணிக்கு ஸ்மிருதி மந்தனா கேப்டனாக இருக்கிறார். டெல்லி கேப்பிடல் அணிக்கு ஜெமிமா ரோட்டரிகியூஸ் கேப்டனாக இருக்கிறார்.

- Advertisement -

டெல்லி ரன்குவிப்பு

முதலில் பேட்டிங் செய்ய வந்த டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு தொடக்க வீராங்கனைகள் லிசல்லே லீ 30 பந்தில் 37 ரன்கள், செபாலி வர்மா 13 பந்தில் 20 ரன்கள் எடுத்து அதிரடியான துவக்கத்தை ஏற்படுத்திக் கொடுத்தார்கள். மூன்றாவது இடத்தில் வந்த வோல்வார்ட் 25 பந்தில் 44 ரன்கள் எடுத்தார்.

இதைத்தொடர்ந்து சிறப்பாக விளையாடிய கேப்டன் ஜெமிமா ரோட்டரிக்யூஸ் 37 பந்துகளில் 57 ரன்கள், சினேலே ஹென்றி ஆட்டம் இழக்காமல் அதிரடியாக 15 பந்தில் 35 ரன்கள் எடுத்தார். டெல்லி கேப்பிடல்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் நான்கு விக்கெட் இழப்புக்கு 203 ரன்கள் குவித்தது.

- Advertisement -

போட்டியை முடித்த ஜோடி

இதைத் தொடர்ந்து களம் இறங்கிய ஆர்சிபி அணிக்கு தொடக்க வீராங்கனை கிரேஸ் ஹாரிஸ் 7 பந்துகளில் ஒன்பது ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். இதற்கு அடுத்து மூன்றாவது இடத்தில் வந்த ஆஸ்திரேலியா வீராங்கனை ஜார்ஜியா வோல் அதிரடியாக விளையாடி 54 பந்துகளில் 79 ரன்கள் சேர்த்தார்.

இதையும் படிங்க : ஆஸ்திரேலியாவுக்கு தைரியம் இருக்கா?.. முடிஞ்சா இந்த பிளேயரை விளையாட வைங்க பார்க்கலாம் – அஸ்வின் பேச்சு

இன்னொரு முனையில் மிகச் சிறப்பாக விளையாடிய ஸ்மிருதி மந்தனா 41 பந்துகளில் 12 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்கள் உடன் 87 ரன்கள் குவித்து வெற்றியை எளிதாக்கி கொடுத்தார். இறுதி ஓவர்களில் 10 ரன்கள் எடுத்து ஆர்சிபி அணி நான்கு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இரண்டாவது முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.

- Advertisement -