ஆஸ்திரேலியாவுக்கு தைரியம் இருக்கா?.. முடிஞ்சா இந்த பிளேயரை விளையாட வைங்க பார்க்கலாம் – அஸ்வின் பேச்சு

0
7
Ashwin

இந்திய முன்னாள் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் நடப்பு டி20 உலகக் கோப்பையில் ஆஸ்திரேலியா அணியின் பலவீனம் குறித்து வெளிப்படையாக பேசியிருக்கிறார்.

டி20 உலகக் கோப்பை தொடருக்கு தயாராக பாகிஸ்தானுக்கு சென்று மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஆஸ்திரேலியா அணி சமீபத்தில் விளையாடியது. இந்த தொடரில் ஒரு போட்டியை கூட வெல்ல முடியாமல் மேலும் 100 ரன்களை கூட எட்ட முடியாமல் ஆஸ்திரேலியா அணி படுதோல்வி அடைந்தது.

- Advertisement -

ஆஸ்திரேலியா அணியின் பலவீனங்கள்

தற்போதுள்ள ஆஸ்திரேலிய டி20 அணி வேகப் பந்துவீச்சுக்கு சாதகமான சூழ்நிலையில் ஓரளவுக்கு சிறப்பாக செயல்பட முடியும். அதே சமயத்தில் சுழல் பந்துவீச்சுக்கு எதிராக மிகவும் தடுமாற்றத்துடன் காணப்படுகிறது. பாகிஸ்தானுக்கு எதிராக சுழல் பந்துவீச்சில் மோசமாக விளையாடி தோல்வியடைந்து இருக்கிறது.

மேலும் கம்மின்ஸ், ஹேசில்வுட், ஸ்டார்க் மூவருமே இந்த முறை ஆஸ்திரேலியா அணியில் இடம் பெறவில்லை. மேலும் கேமரூன் கிரீன் மிடில் வரிசைக்கு சிறப்பானவராக இல்லை. தொடக்க வீரர்கள் ஹெட் மற்றும் கேப்டன் மார்ஸ் மட்டுமே நம்பிக்கை தரக் கூடியவர்களாக இருக்கிறார்கள். இதன் காரணமாக பலவீனமாக உள்ளது.

- Advertisement -

தைரியம் இருக்கிறதா?

இது குறித்து ரவிச்சந்திரன் அஸ்வின் பேசும்பொழுது ” இந்த அணியில் கூப்பர் கனொலிக்கு உண்மையில் இடம் கிடையாது. அவரை விளையாட வைக்க வேண்டுமென்றால் மேக்ஸ்வெல் இடத்தில் விளையாட வைக்க வேண்டும். ஆனால் இதைச் செய்வதற்கு ஆஸ்திரேலியாவுக்கு தைரியம் இருக்கிறதா? மிடில் ஆர்டரில் முன்னேற்றத்தை ஏற்படுத்தும் திறமை கேமரூன் கிரீனுக்கு இல்லை. ஆஸ்திரேலியா நிர்வாகம் பல கடினமான முடிவுகளை எடுக்க வேண்டி உள்ளது”

இதையும் படிங்க: பாகிஸ்தான் கேப்டன் சல்மான் அலி பதவி பறிப்பு.. பின்னணியில் இந்திய அணி.. புதிய கேப்டன் யார்?

“அவர்கள் ஸ்மித்திடம் திரும்பி செல்ல முடியுமா? ஒருவேளை ஆஸ்திரேலிய தேர்வாளர்கள் அவரிடம் பேசி நீங்கள் எங்களுக்கு தேவை என்று சொல்லி இருக்கலாம். ஏனென்றால் சமீப காலத்தில் அவர் மிகச் சிறப்பாக விளையாடியிருக்கிறார். தற்போது ஆஸ்திரேலிய டி20 அணியில் மூத்த வீரர்கள் யாரும் இல்லை. எனவே இவரது அனுபவத்தை பயன்படுத்தலாம். நான் தற்போது ஆஸ்திரேலிய ரசிகனாக இருந்தால், உலகக் கோப்பைக்கு செல்லும் இந்த அணியை பார்த்து கவலைப்பட்டு இருப்பேன்” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -