97 ரன் கைவசம் 5 விக்கெட்.. சாய் கிஷோர் செய்த மேஜிக்.. திடீர் வெற்றி பாதையில் தமிழக அணி.. ரஞ்சி டிராபி

0
941
Sai

தற்போது ரஞ்சி டிராபி இரண்டாம் கட்ட போட்டிகளில் ஜார்க்கண்ட் அணிக்கு எதிராக தமிழ்நாடு அணி வெற்றி பெற கைவசம் ஐந்து விக்கெட்டுகள் இருக்க 97 ரன்கள் தேவைப்படுகிறது. இந்த நிலையில் இந்த போட்டி பரபரப்பான கட்டத்திற்கு நகர்ந்திருக்கிறது.

நேற்று தொடங்கிய இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற ஜார்க்கண்ட் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த ஜார்க்கண்ட் அணி 53.2 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 185 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் சரண்தீப் சிங் 52 ரன்கள் எடுத்தார். தமிழ்நாடு அணியின் சாய் கிஷோர் மற்றும் அஜித் ராம் இருவரும் தலா மூன்று விக்கெட் கைப்பற்றினார்கள்.

- Advertisement -

ஒரே நாளில் இரண்டு இன்னிங்ஸ் முடிவு

இது தொடர்ந்து முதல் நாளில் தனது முதல் இன்னிங்சை தொடங்கிய தமிழ்நாடு அணி அதிர்ச்சி அளிக்கும் வகையில் 27.5 ஓவரில் 105 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. ஜார்கண்ட் அணியின் பந்துவீச்சில் உட்கர்சிங் ஆறு விக்கெட் கைப்பற்றினார். தமிழ்நாடு அணியின் தரப்பில் முஹம்மத் அலி 37 ரன்கள் எடுத்தார்.

நேற்று முதல் நாளிலேயே மீண்டும் ஜார்க்கண்ட் அணி தனது முதல் இன்னிங்சை துவங்கி ஒரு விக்கெட் இழப்புக்கு 5 ரன்கள் எடுத்திருந்தது. ஒரே நாளில் இரண்டு அணிகளும் தங்களது முதல் இன்னிங்ஸ் விளையாடி முடித்த ஆச்சரியமான நிகழ்வு நடைபெற்றது. அத்துடன் மொத்தமாக ஒரே நாளில் 21 விக்கெட்டுகள் விழுந்திருந்தன.

- Advertisement -

ஆட்டத்தை திருப்பிய சாய் கிஷோர் – அஜித் ராம்

இதைத்தொடர்ந்து ஜார்க்கண்ட் அணி தனது இரண்டாவது இன்னிங்ஸில் நாப்பத்தி எட்டு புள்ளி நான்கு ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 154 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. தமிழக அணியின் தரப்பில் கேப்டன் சாய் கிஷோர் 5 மற்றும் அஜித் ராம் 4 விக்கெட்டுகள் கைப்பற்றினார்கள். இவர்கள் சிறப்பான பந்துவீச்சின் காரணமாக தமிழக அணி வெற்றி பெறவும் ஒரு வாய்ப்பு உருவானது.

இதையும் படிங்க : சாம்பியன்ஸ் டிராபி.. ஆஸ்திரேலிய அணியில் முக்கிய வீரர் விலகல்.. ஐபிஎலில் விளையாடுவது சந்தேகம்

இதற்கு அடுத்து 234 ரன்கள் இலக்கை நோக்கி விளையாடிய தமிழக அணி இன்று இரண்டாம் நாள் முடிவில் ஐந்து விக்கெட் இழப்புக்கு 137 ரன்கள் எடுத்திருக்கிறது. மேற்கொண்டு தமிழக அணியின் கையில் ஐந்து விக்கெட் இருக்க வெற்றிக்கு 97 ரன்கள் தேவைப்படுகிறது. தற்போது களத்தில் விஜய் சங்கர் 33, அஜித் ராம் 5 ரன்கள் எடுத்து நிற்கிறார்கள். எனவே இந்த போட்டி பரபரப்பான கட்டத்தை எட்டி இருக்கிறது!

- Advertisement -