274 ரன்.. 2 பேர் 70 பந்தில் 199 ரன்கள்.. ஆஸ்திரேலியா வெஸ்ட் இண்டீஸ் சாம்பியன்ஸை துவம்சம் செய்தது

0
2541
Australia

முன்னாள் வீரர்கள் பங்குபெறும் உலக லெஜெட்ன்ஸ் சாம்பியன்ஷிப் டி20 லீக் தற்பொழுது இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. இன்றைய போட்டியில் ஆஸ்திரேலியா சாம்பியன்ஸ் மற்றும் வெஸ்ட் இண்டீஸ் சாம்பியன்ஸ் அணிகள் மோதின். இதில் ஆஸ்திரேலியா சாம்பியன்ஸ் அணி ருத்ர தாண்டவம் ஆடி வென்றிருக்கிறது.

இன்றைய போட்டிக்கான டாசில் வெற்றி பெற்ற வெஸ்ட் இண்டீஸ் சாம்பியன்ஸ் அணியின் கேப்டன் டேரன் சமி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். அவரது இந்த முடிவு மிகவும் தவறானது என்பதை ஆஸ்திரேலியா சாம்பியன்ஸ் பேட்ஸ்மேன் உடனடியாக நிரூபித்தார்கள். அவர்களது ஆட்டத்தில் அனல் பறந்தது.

- Advertisement -

ஆஸ்திரேலிய சாம்பியன்ஸ் அணிக்கு துவக்க ஆட்டக்காரர் ஆரோன் பின்ச் 5 பந்தில் 7 ரன்கள், ஷான் மார்ஸ் 20 பந்தில் 22 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்கள். ஆனால் மூன்றாவது இடத்தில் வந்த பென் டன்க் மற்றும் ஐந்தாவது இடத்தில் வந்த டேனியல் கிறிஸ்டியன் இருவரும் ருத்ர தாண்டவம் ஆடினார்கள்.

பென் கட்டிங் 35 பந்துகளில் 12 பவுண்டரி மற்றும் 7 சிக்ஸர்களுடன் 100 ரன்கள், டேனியல் கிறிஸ்டியன் 35 பந்துகளில் 11 பவுண்டரிகள் 8 சிக்ஸர்களுடன் 99 ரன்கள் குவித்தார்கள். 20 ஓவர்கள் முடிவில் ஆஸ்திரேலியா சாம்பியன்ஸ் அணி ஏழு விக்கெட்டுகளை இழந்து 274 ரன்கள் குவித்தது. வெஸ்ட் இண்டிஸ் பந்துவீச்சாளர்களை ஆஸ்திரேலியா சாம்பியன்ஸ் பேட்ஸ்மேன்கள் துவம்சம் செய்து விட்டார்கள். இதில் பென் டன்க் மற்றும் டேனியல் கிறிஸ்டியன் 70 பந்துகளில் 199 ரன்கள் நொறுக்கித் தள்ளி இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

இதைத் தொடர்ந்து விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் சாம்பியன்ஸ் அணிக்கு தொடக்க ஆட்டக்காரர் டிவேன் ஸ்மித் 40 பந்தில் 64 ரன்கள், ஆஸ்லே நர்ஸ் 36 பந்தில் 70* ரன்கள் அதிரடியாக எடுத்தார்கள். ஆனாலும் வெஸ்ட் இண்டீஸ் சாம்பியன்ஸ் அணியின் வெற்றிக்கு அது போதுமானதாக அமையவில்லை. அந்த அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 219 ரன்கள் மட்டுமே எடுத்தது.

இதையும் படிங்க : 200 ரன் அடிக்க முடியாம போனதுக்கு காரணம் நானா?.. அங்க நடந்தது உண்மையா இதுதான் – சுப்மன் கில் பேட்டி

இறுதியாக ஆஸ்திரேலிய சாம்பியன்ஸ் அணி 55 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆஸ்திரேலியா சாம்பியன்ஸ் அணியின் பந்து வீச்சு தரப்பில் கேப்டன் பிரட் லீ இரண்டு விக்கெட் கைப்பற்றினார். மேலும் இந்தப் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணியின் அதிரடி ஆட்டக்காரர் கிறிஸ் கெயில் விளையாடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -