U19 உலகக் கோப்பை.. 16 நாடுகள்.. 48 போட்டிகள்.. இந்திய அணியின் அட்டவணை.. எந்த சேனல்.. முழு விவரம்

0
198

ஐசிசி 19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலகக்கோப்பை வரும் ஜனவரி மாதம் 19ஆம் தேதி நடைபெற உள்ளது. முதலில் போட்டி இலங்கையில் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. பின்னர் இலங்கையின் அரசியல் தலையீடு காரணமாக 2023ஆம் ஆண்டு உலகக் கோப்பையின் போது இலங்கையை ஐசிசி இடைநீக்கம் செய்தது. இதனால் தென்னாப்பிரிக்கா உலக கோப்பையை நடத்தும் உரிமையை பெற்றுள்ளது.

மொத்தம் 23 நாட்கள் நடைபெறும் இப்போட்டியில் 16 அணிகள் கலந்து கொண்டு 48 போட்டிகள் நடைபெறுகிறது. ஐந்து முறை உலகக் கோப்பையை வென்ற இந்திய அணி மிகவும் வலுவான அணிகளில் ஒன்றாக பார்க்கப்படுகிறது. இதில் பங்கேற்கும் 16 அணிகள் மொத்தம் நான்கு குழுக்களாக பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு குழுவிலும் முதல் மூன்று இடங்களை பிடிக்கும் அணிகள் சூப்பர் 6 சுற்றுக்கு தகுதி பெறும். இவை குரூப் 1,குரூப் 2 என்று பிரிக்கப்படும்.

- Advertisement -

குரூப் 1 என்பது ஏ மற்றும் டி குழுக்களில் உள்ள முதல் மூன்று இடங்களை உள்ளடக்கி இருக்கும். குரூப் 2 என்பது பி மற்றும் சி அணிகளை உள்ளடக்கி இருக்கும். இதில் ஒவ்வொரு சூப்பர் 6 குழுவில் இருந்தும் முதல் இரண்டு அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெறும். அதேசமயம் ஒவ்வொரு அணிகளின் தர நிலையை தீர்மானிக்க ஒரு அணி மற்ற அணியுடன் உடன் போட்டி போடும்.

குழு ஏ : நடப்புச் சாம்பியன் இந்தியா, பங்களாதேஷ், அயர்லாந்து மற்றும் அமெரிக்கா. குழு பி: இங்கிலாந்து, தென்னாபிரிக்கா, வெஸ்ட் இண்டீஸ் மற்றும் ஸ்காட்லாந்து

குழு சி : ஆஸ்திரேலியா, இலங்கை, ஜிம்பாப்வே, நமீபியா குழு டி : ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், நியூசிலாந்து மற்றும் நேபாளம்

- Advertisement -

ஐசிசி அண்டர் 19 உலகக் கோப்பைக் கான இந்திய அணியின் (குழு ஏ) அட்டவணை விபரம் :

ஜனவரி 19: அயர்லாந்து vs அமெரிக்கா

ஜனவரி 20: பங்களாதேஷ் vs இந்தியா

ஜனவரி 22: பங்களாதேஷ் vs அயர்லாந்து

ஜனவரி 25: இந்தியா vs அயர்லாந்து

ஜனவரி 26: பங்களாதேஷ் vs அமெரிக்கா

ஜனவரி 28: இந்தியா vs அமெரிக்கா

போட்டிகள் அனைத்தும் இந்திய நேரப்படி காலை 10 மணிக்கு தொடங்கும். இது ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் மற்றும் டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டாரில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படுகிறது.