தென் ஆப்பிரிக்கா அந்த 5% தப்பை செய்யாதிங்க.. அமெரிக்கா இந்த மாதிரி வந்தா உங்கள முடிச்சுடும் – ரிக்கி பாண்டிங் பேச்சு

0
126
Ponting

நடப்பு 9வது டி20 உலக கோப்பை தொடரின் சூப்பர் 8 சுற்று நாளை முதல் துவங்குகிறது. முதல் போட்டியில் தென் ஆப்பிரிக்கா மற்றும் அமெரிக்கா அணிகள் மோதிக் கொள்கின்றன. இந்த போட்டியில் இரு அணிகளுக்குமான வெற்றி வாய்ப்புகள் குறித்து ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் கருத்து தெரிவித்திருக்கிறார்.

ஏ பிரிவிலிருந்து அமெரிக்கா இரண்டாவது அணியாகவும், டி பிரிவில் இருந்து முதல் அணியாக தென் ஆப்பிரிக்காவும் சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற்றன. மேலும் இவர்களது பிரிவில் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் இங்கிலாந்து என பலம் வாய்ந்த அணிகள் இருக்கின்றன.

- Advertisement -

நாளை நார்த் சவுண்ட், ஆன்டிகுவா, விவியன் ரிச்சர்ட்ஸ் மைதானத்தில் இந்திய நேரப்படி எட்டு மணிக்கு துவங்கும் போட்டியில் தென் ஆப்பிரிக்கா மற்றும் அமெரிக்க அணிகள் மோதுகின்றன. தென் ஆப்பிரிக்கா அணியை பொறுத்தவரையில் அவர்களுக்கு பந்து வீச்சு மிகவும் பலமாக இருக்கிறது. அதே சமயத்தில் அவர்கள் பேட்டிங் எதிர்பார்த்த அளவுக்கு இல்லை. ஆல் ரவுண்டர் உடன் சேர்த்து அவர்கள் பிளேயிங் லெவலில் ஏழு பேட்ஸ்மேன் மட்டுமே இருக்கிறார்கள்.

அமெரிக்க அணியின் பலவீனம் என்றால் அவர்களுக்கு அனுபவம் கிடையாது. ஆனால் அவர்கள் கடுமையாக உழைத்து ஒரே அணியாக இணைந்து விளையாடுகிறார்கள். மேலும் டி20 கிரிக்கெட் என்பதால் அவர்களுக்கு வெற்றி வாய்ப்பும் கூடுகிறது.

- Advertisement -

இந்த நிலையில் ரிக்கி பாண்டிங் இந்த போட்டி குறித்து பேசும்பொழுது “அமெரிக்காவின் கடின உழைப்புக்கு கிடைத்த ஒரு பெரிய வெகுமதியாக அடுத்த சுற்று வாய்ப்பு அவர்களுக்கு கிடைத்திருக்கிறது. தென் ஆப்பிரிக்கா அவர்களுடைய ஆட்டத்தில் 5 சதவீதம் குறைவாக இருந்தாலும், அந்த நேரத்தில் அமெரிக்கா சிறந்த முறையில் விளையாடினாலும், தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி விடும். இந்த உலகக் கோப்பையில் நாம் இதுவரை பார்த்ததை விட இன்னும் சுவாரசியமாக இருக்கும். இதற்காக என்னால் காத்துக் கொண்டிருக்க முடியவில்லை.

இதையும் படிங்க : 1 இந்தியா.. 3 ஆஸி.. இங்கிலாந்து வீரர்களுக்கு இடமில்லை.. நாசர் ஹுசைன் செலக்ட் செய்த டி20 உ.கோ அணி

மேலும் இந்த டி20 உலகக் கோப்பையில் என்னுடைய பிடித்தமான அணிகளில் தென் ஆப்பிரிக்காவையும் குறிப்பிட்டு இருந்தேன். அவர்கள் இன்னும் ஆபத்தான அணி என்று நான் நினைக்கிறேன். ஆனால் அவர்களுடைய பேட்டிங் சரியாக அமைந்தால்மட்டுமே அவர்களால் ஆபத்தான அணியாக இருக்க முடியும்” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -