நாளை அயர்லாந்துக்கு எதிராக.. வலிமையான உத்தேச இந்திய பிளேயிங் XI.. 2 முக்கிய மாற்றங்கள்

0
4484
ICT

இந்திய அணி நாளை நியூயார்க் நாசாவ் கவுன்டி சர்வதேச மைதானத்தில் அயர்லாந்து அணிக்கு எதிராக டி20 உலகக் கோப்பை தொடரில் விளையாட இருக்கிறது. புதிய மைதானமான இதில் எது வலிமையான இந்திய பிளேயிங் லெவனாக இருக்கும் என்று பார்க்கலாம்.

கடந்த வருடத்தில் கட்ட ஆரம்பிக்கப்பட்ட நியூயார்க் மைதானம் ஒரு வருடத்தில் டி20 உலகக் கோப்பை தொடருக்கு தயார் செய்யப்பட்டு இருக்கிறது. மேலும் ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு நகர்த்தக்கூடிய அளவிலான டிராப்-இன் பிட்ச் பயன்படுத்தப்படுகிறது.

- Advertisement -

மேலும் மிகக் குறைந்த காலத்தில் வெறும் ஐந்து மாதத்தில் ஆடுகளங்கள் உருவாக்கப்பட்டிருக்கின்றன. பொதுவாக இப்படி சீக்கிரத்தில் உருவாக்கப்படும் ஆடுகளங்கள் ஆரம்பத்தில் பல மாதிரியான பவுன்ஸ் கொண்டதாக இருக்கும். மேலும் சில நேரம் பந்து நின்று வரும் எனவே பேட்ஸ்மேன்கள் விளையாடுவது கடினம்.

நேற்று இலங்கை தென் ஆப்பிரிக்க அணிகள் மோதிய போட்டியில் இதுதான் நடந்தது. இதில் தென் ஆப்பிரிக்க அணி புத்திசாலித்தனமாக ஐந்து முழுமையான பந்துவீச்சாளர்களை பிளேயிங் லெவனில் வைத்து இலங்கை அணிக்கு நெருக்கடி கொடுத்தது. ஆடுகளம் பந்துவீச்சுக்கள் சாதகமாக இருப்பதால் பகுதி நேர பந்துவீச்சாளர்களை பயன்படுத்த விரும்பவில்லை.

இதன் காரணமாக நாளை இந்திய அணியும் ஹர்திக் பாண்டியா இல்லாமல் ஐந்து முழுமையான பந்துவீச்சாளர்களைக் கொண்டு களம் இறங்குவது சிறப்பானதாக இருக்கும். குறிப்பாக முகமது சிராஜ் உடன் மூன்று வேகப்பந்து பேச்சாளர்கள் இருப்பது சிறப்பானது.

- Advertisement -

இதேபோல் குல்தீப் யாதவ் உடன் சுழல் பந்துவீச்சு ஆல் ரவுண்டர் ஆக ரவீந்திர ஜடேஜா இடத்தில் அக்சர் படேல் விளையாடுவது நல்லது. அவர் ஜடேஜாவை விட டி20 கிரிக்கெட்டில் நன்றாக பேட்டிங் செய்வார், மேலும் அவர் பவர் பிளேவில் பந்து வீசக்கூடியவர் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே ஹர்திக் பாண்டிவை சேர்த்து ஆறு பேட்ஸ்மேன்கள், அக்சர் படேலை சேர்த்து 5 பந்துவீச்சாளர்கள் பந்துவீச்சாளர்கள் என செல்வது நல்லது. மேலும் துவக்க ஆட்டக்காரர்களாக ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி வருவது மிக முக்கியம்.

இதையும் படிங்க : 77 ரன்கள்.. அதிகபட்சம் 27 ரன்.. ஜவ்வாய் இழுத்த போட்டி.. இலங்கை அணியை வீழ்த்தி தென் ஆப்பிரிக்கா வெற்றி

2024 டி20 உலகக்கோப்பையில் அயர்லாந்து அணிக்கு எதிரான வலிமையான உத்தேச இந்திய பிளேயிங் லெவன் :

ரோகித் சர்மா, விராட் கோலி, ரிஷப் பண்ட், சூரியகுமார் யாதவ், சிவம் துபே, ஹர்திக் பாண்டியா, அக்சர் படேல், குல்தீப் யாதவ், பும்ரா, சிராஜ் மற்றும் அர்ஸ்தீப் சிங்.