2024 டி20 உலக கோப்பை.. இந்த சின்ன டீமே இந்தியாவை பயமுறுத்தும் – கம்பீர் எச்சரிக்கை!

0
407
Gambhir

பிறக்க இருக்கும் புது வருடத்தில், மூன்று கிரிக்கெட் வடிவங்களில் டி20 கிரிக்கெட் வடிவத்திற்கு உலகக்கோப்பை நடைபெற இருக்கிறது. வருகின்ற ஆண்டு டி20 உலகக்கோப்பை ஆண்டாகும்.

இந்தியாவில் வருடம் தோறும் நடக்கும் ஐபிஎல் தொடர் முடிந்து ஜூலை மாதத்தில் இந்த முறை வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் டி20 உலகக் கோப்பை இரு நாடுகளில் வைத்து நடத்தப்படுகிறது.

- Advertisement -

இதன் காரணமாக உலகக் கோப்பையை நடத்தும் இரண்டு நாடுகளான வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்கா நேரடியாக டி20 உலகக்கோப்பைக்கு தகுதி பெற்று இருக்கின்றன. கடந்த டி20 உலகக் கோப்பையில் வெஸ்ட் இண்டீஸ் தகுதி பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அமெரிக்காவுக்கு தொடரை நடத்துவதால் அதிர்ஷ்டம் கிடைத்திருக்கிறது.

மேலும் சொந்த நாட்டில் டி20 தொடர் நடைபெறுகின்ற காரணத்தினால் வெஸ்ட் இண்டீஸ் மிகவும் பலமாக இருக்கும். அவர்கள் மண்ணில் வைத்து தென் ஆப்பிரிக்கா இந்தியா மற்றும் இங்கிலாந்து என மூன்று பெரிய நாடுகளை சமீபத்தில் டி20 தொடரில் வெஸ்ட் இண்டீஸ் வீழ்த்தி இருக்கிறது.

இது மட்டும் இல்லாமல் வெஸ்ட் இண்டிஸ் மற்றும் அமெரிக்காவில் பெரும்பாலும் ஆடுகளங்கள் வேகம் இல்லாமல் மெதுவாக இருக்கக்கூடியவை. எனவே இங்கு சுழற் பந்துவீச்சு மிக நன்றாக எடுபடும். மேலும் பொதுவாகவே பேட்டிங் செய்வது கொஞ்சம் கடினமாக இருக்கும்.

- Advertisement -

சமீபத்தில் இங்கு ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இங்கிலாந்து விளையாடியது. இது அவர்களுக்கு மிகவும் அனுபவம் தரக்கூடிய ஒன்றாக அமைந்திருக்கும். மேலும் ஆஸ்திரேலியாவை பொருத்தவரை டி20 கிரிக்கெட்டுக்கு அதிரடியான வீரர்கள் இருக்கிறார்கள்.

எனவே தொடரை நடத்தும் வெஸ்ட் இண்டீஸ், ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து ஆகிய மூன்று நாடுகளும், நடக்க இருக்கும் டி20 உலக கோப்பையில் அச்சுறுத்தல் தரும் நாடுகளாக இருக்கும். இந்த நிலையில் இது குறித்து கம்பீர் பேசியிருக்கிறார்.

கம்பீர் கூறும் பொழுது “டி20 உலகக்கோப்பையில் ஆப்கானிஸ்தான் அணி வெஸ்ட் இண்டிஸ் சூழ்நிலையில் இந்தியாவுக்கு பெரிய அச்சுறுத்தலாக இருக்கும். மேலும் ஆஸ்திரேலியாவில் நிறைய இம்பேக்ட் தரக்கூடிய வீரர்கள் இருக்கிறார்கள். மேலும் இவர்களைப் போலவே சிறந்த முறையில் டி20 விளையாடக்கூடிய இங்கிலாந்தும் இருக்கிறது. இந்த மூன்று நாடுகளும் இந்தியாவுக்கு அச்சுறுத்தல் தரக்கூடிய நாடுகள்!” என்று எச்சரிக்கை செய்திருக்கிறார்!