2024 டி20 உலககோப்பை.. இந்திய அணியில் வாய்ப்பு குறைவான 5 நட்சத்திர வீரர்கள்!

0
1705
Rahul

இந்தியாவில் மார்ச் மாதம் இறுதியில் தொடங்கும் 17 வது சீசன் ஐபிஎல் தொடர் மே மாதம் இறுதியில் முடிவடைகிறது. இந்த இரண்டு மாத காலங்கள் உலகக் கிரிக்கெட்டில் முக்கியமான போட்டிகள் எதுவும் நடைபெறாது.

ஐபிஎல் தொடர் முடிந்து உடனே ஜூன் மாதத்தில் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் டி20 உலகக் கோப்பை தொடர் நடைபெற இருக்கிறது. இந்த தொடரில் மொத்தம் இந்த முறை 20 அணிகள் பங்கு பெற இருக்கின்றன. அரையிறுதிக்கு முன்பாக இரண்டு சுற்றுகள் நடைபெற இருக்கின்றன.

- Advertisement -

நடைபெற இருக்கும் இந்த டி20 உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணியில் இடம்பெற வாய்ப்பில்லாத ஐந்து இந்திய நட்சத்திர வீரர்கள் யார்? என்று இந்த சிறிய கட்டுரை தொகுப்பில் பார்க்கலாம்.

புவனேஸ்வர் குமார்:
இந்திய அணிக்கு மூன்று வடிவ கிரிக்கெட்டிலும் ஒரு காலத்தில் நம்பிக்கையான ஸ்விங் வேகபந்துவீச்சாளராக இருந்தார். கடந்த டி20 உலக கோப்பையிலும் இந்திய அணியின் முதன்மை வேகப்பந்துவீச்சாளராக இவரே இருந்தார். காயத்திற்கு பிறகு இவருடைய வேகம் குறைந்ததால், இறுதிக்கட்ட ஓவர்களில் இவர் நிறைய ரன்களை வாரிக் கொடுப்பதால், இவருடைய இடம் தற்பொழுது அர்ஸ்தீப் சிங்குக்கு வழங்கப்பட்டிருக்கிறது.

கே.எல்.ராகுல்!
உலகக் கோப்பை தொடரில் ஒருநாள் கிரிக்கெட் இந்திய அணியில் மீண்டும் இடம் பிடித்து பேட்ஸ்மேன் ஆகவும் விக்கெட் கீப்பராகவும் நம்ப முடியாத வகையில் சிறப்பாக செயல்பட்டு இருக்கிறார். ஆனாலும் கூட டி20 உலகக் கோப்பை இந்திய அணியின் மிடில் ஆர்டர் மற்றும் விக்கெட் கீப்பர் இடங்களில் இவர் இடம் பெறுவது மிகவும் கடினமான காரியம்.

- Advertisement -

ஸ்ரேயாஸ் ஐயர் :
பேட்டிங் திறமையும் நல்ல தன்னம்பிக்கையான மனநிலையும் கொண்ட இளைஞராக இருந்தாலும் கூட, இவருக்கு சில குறிப்பிட்ட பேட்டிங் பலவீனங்கள் இருக்கிறது. இதன் காரணமாக இவருடைய இடம் எப்பொழுதும் கேள்விக்குறியதாகவே பார்க்கப்படுகிறது. மிக முக்கியமாக ரன்கள் அடித்தே ஆக வேண்டிய டி20 வடிவத்தில் உலகக் கோப்பைத் தொடரில் இவரிடம் பெறுவது கடினம். இவருக்கு பதிலாக நிறைய திறமையான இளம் இந்திய வீரர்கள் இருக்கிறார்கள்.

இசான் கிஷான் :
டி20 கிரிக்கெட் வடிவத்திற்கு பொருத்தமான விக்கெட் கீப்பிங் பேட்ஸ்மேன் ஆக இருந்தாலும் கூட, தற்பொழுது ரோகித் சர்மா திரும்ப வந்திருப்பதால், ஏற்கனவே துவக்க ஆட்டக்காரர்களாக ஜெய்ஸ்வால் மற்றும் கில் இருப்பதால், இவரை மூன்றாவது துவக்க ஆட்டக்காரர் என்கின்ற இடத்திற்கு தேர்வு செய்ய மாட்டார்கள். எனவே இந்த முறை இவருக்கு வாய்ப்பு கடினம்.

யுஸ்வேந்திர சாகல் :
வலது கை மணிக்கட்டு சுழற் பந்துவீச்சாளரான இவருடைய இடத்துக்கு ரவி பிஸ்னாய் மற்றும் குல்தீப் யாதவ் என இரண்டு சுழல் பந்துவீச்சாளர்கள் இருக்கிறார்கள். இரு நாடுகளுக்கு இடையேயான தொடர்களில் இவருக்கு வாய்ப்பு கிடைக்கலாம். ஆனால் இனி உலகக் கோப்பை தொடர்களில் இவருக்கு வாய்ப்பு என்பது மிகவும் அரிதானது!