நடப்பு லெஜெண்ட்ஸ் லீக் கிரிக்கெட்டில் தினேஷ் கார்த்திக் கேப்டனாக இருந்து வந்த சவுத்தர்ன் சூப்பர் ஸ்டார்ஸ் அணி, இர்பான் பதான் தலைமையிலான கோனர்க் சூர்யாஸ் ஒடிசா அணியை சூப்பர் ஓவரில் வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.
கடந்த வாரம் முதல் சர்வதேச கிரிக்கெட் விளையாடிய முன்னாள் வீரர்கள் கலந்து கொண்ட லெஜெண்ட்ஸ் லீக் கிரிக்கெட் இந்தியாவில் நடைபெற்று வந்தது. இந்த தொடரின் இறுதி போட்டியில் டாஸ் வென்ற கோனர்க் சூர்யாஸ் ஒடிசா அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
முதலில் களம் இறங்கிய சவுத்தர்ன் சூப்பர் ஸ்டார்ஸ் அணிக்கு மார்ட்டின் கப்தில் 25 பந்தில் 27 ரன்கள் எடுத்தார். இதற்கு அடுத்து இந்திய வீரர் பவான் நெகி 24 பந்தில் 33 ரன்கள் எடுத்தார். ஜிம்பாப்வே அணியின் மசகட்சா 58 பந்துகளில் 8 பவுண்டரில் மற்றும் 5 சிக்ஸர்கள் உடன் 83 ரன்கள் குவித்தார். அந்த அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 164 ரன்கள் எடுத்தது. முனவீரா 4 விக்கெட் கைப்பற்றினார்.
இதைத் தொடர்ந்து இலக்கை நோக்கி விளையாடிய கோனர்க் சூர்யாஸ் ஒடிசா அணிக்கு ரிச்சர்ட் லெவி 16, முனவீரா 11, கெவின் ஓ பிரையன் 17, இர்பான் பதான் 3, ஜெஸ்ஸி ரைடர் 11 என சொற்ப ரெண்டு எடுத்து வெளியேறினார்கள். அந்த அணி 91 ரன்கள் 6 முக்கிய விக்கெட்டுகளை இழந்து தோல்வியை நோக்கி தள்ளப்பட்டது.
இந்த நிலையில் தனி ஒரு வீரராக யூசுப் பதான் ஆட்டத்தை மாற்றி, கடைசி ஓவருக்கு வெற்றிக்கு 6 ரன்கள் தேவை என்ற நிலைக்கு கொண்டு வந்தார். இந்த நிலையில் துரதிஷ்டவசமாக சதுரங்க டி சில்வா வீசிய கடைசி ஓவரில் 5 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதன் காரணமாக போட்டி சூப்பர் ஓவருக்கு சென்றது. யூசுப் பதான் 38 பந்துகளில் 6 பவுண்டரிகள் மற்றும் 8 சிக்ஸர்களுடன் 85 ரன்கள் எடுத்தார்.
இதையும் படிங்க : சிஎஸ்கே மும்பை இல்லை.. இதுதான் கடவுளால் ஆசீர்வதிக்கப்பட்ட ஐபிஎல் அணி – ரவிச்சந்திரன் அஸ்வின் பேட்டி
இதை தொடர்ந்து யூசுப் பதான் அணி சூப்பர் ஓவரில் முதலில் பேட்டிங் செய்து 13 ரன்கள் எடுத்தது. அதில் யூசுப் பதான் 7 ரன்கள் எடுத்தார். இதற்கு அடுத்து பேட்டிங் செய்த தினேஷ் கார்த்திக் விட்டுச் சென்ற கேதர் ஜாதவ் தற்போது கேப்டனாக இருக்கும் சவுத்தர்ன் சூப்பர் ஸ்டார்ஸ் அணி 14 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றதோடு, 2024 லெஜெண்ட்ஸ் லீக் தொடரை கைப்பற்றி சாம்பியன் பட்டத்தை வென்றது.