2024 ஐபிஎல் ஏலத்தில் விற்காத சர்பராஸ் கான்.. ஒரே அணியால் மட்டும் வாங்க முடியும்.. மற்ற வாய்ப்புகள் என்ன?

0
1225
Sarfaraz

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் இறுதியில் துபாயில் 2024 ஆம் ஆண்டு 17வது ஐபிஎல் சீசனுக்கான மினி ஏலம் நடைபெற்றது. இந்த ஏலத்தில் மிட்சல் ஸ்டார் 24.75 கோடி ரூபாய்க்கு ஏல போய், ஐபிஎல் ஏல வரலாற்றில் புதுச் சாதனையை படைத்தார்.

ஐபிஎல் தொடரை எடுத்துக் கொண்டால் மெகாஏலத்திற்கு அடுத்து நடக்கும் சீசனை விட, மினி ஏலம் முடிந்து நடக்கும் சீசன் மிகவும் போட்டி வாய்ந்ததாக இருக்கும்.

- Advertisement -

ஏனென்றால் ஒவ்வொரு அணிகளும் தங்களுக்கு தேவையான வீரர்களை இரண்டாவது மூன்றாவது முறை நடக்கும் இனி ஏலத்தில் வாங்கி மிகுந்த பலமாகி இருப்பார்கள்.

அணிகளுக்கு நல்ல விஷயமாக அமைகின்ற மினி ஏலம் சில வீரர்களுக்கு கெட்ட விஷயமாக அமைந்து விடும். அணிகளால் கழட்டி விடப்படும் சில வீரர்கள் மினி ஏலத்தில் வாங்கப்படாமல் போய்விடுவார்கள். இந்த முறை இந்திய இளம் வீரர் சர்பராஸ் கான் டெல்லி அணியால் கழட்டி விடப்பட, அவரை யாருமே வாங்கவில்லை.

சர்பராஸ் கான் 20 லட்சம் ரூபாய் அடிப்படை விலைக்கு ஏலத்தில் வந்தார். ஆனால் அவரை வாங்குவதற்கு யாரும் ஆர்வம் காட்டவில்லை. கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் டெல்லி அணிக்கு நான்கு போட்டிகளில் அவரால் 53 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. மேலும் நடுவில் வந்து விளையாடும் பொழுதும், மேலும் நல்ல வேகப்பந்துவீச்சுக்கு எதிராகவும் தடுமாற்றங்கள் இருந்தது.இதனால் அவரை யாரும் வாங்கவில்லை.

- Advertisement -

தற்போது சர்பராஸ் கான் இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணிகள் இடம் பிடித்து அறிமுக போட்டியில் அதிரடியாக விளையாடி இன்னொரு கவனத்தையும் கவர்ந்து இருக்கிறார். எனவே இதன் மூலம் அவருக்கு ஐபிஎல் தொடரில் கடைசி நேரத்தில் நுழைவதற்கு ஒரு வாய்ப்பு இருக்கிறது.

ஒரு ஐபிஎல் அணிக்கு மொத்தம் 25 வீரர்கள் அனுமதிக்கப்படுகிறார்கள். தற்பொழுது 9 அணிகள் 25 வீரர்களை நிரப்பி இருக்க, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி மட்டுமே, 23 வீரர்களை மட்டுமே கொண்டு இருக்கிறது.

இதையும் படிங்க : ஐபிஎல் தொடர் எப்பொழுது ஆரம்பிக்கிறது?.. தேதியை வெளியிட்ட பிசிசிஐ பொருளாளர்.. ரசிகர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி

எனவே கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியால் சர்ப்ராஸ் கானை வாங்க முடியும். மேலும் வேறு எந்த அணிகளில் ஆவது இந்திய பேட்ஸ்மேன்கள் காயம் அடையும் பொழுது, சர்ப்ராஸ் கானை வாங்க முடியும். வாய்ப்பு எப்படி வருகிறது என்று பொறுத்து பார்க்கலாம்!