கடைசி நேரத்தில் இஷான் கிஷானை.. டீமை மாற்றி இறக்கிய பிசிசிஐ.. துலீப் டிராபியில் ஆச்சரியம்.. காரணம் என்ன?

0
289
Ishan

இன்று 2024 ஆம் ஆண்டு துலீப் டிராபியின் இரண்டாவது சுற்று போட்டிகள் தொடங்கியது. இதில் கடைசி நேரத்தில் யாரும் எதிர்பார்க்காத வகையில் இஷான் கிஷானை பிசிசிஐ உள்ளே இறக்கி விளையாட வைத்திருக்கிறது.

இஷான் கிஷானை எப்படியும் உள்நாட்டு தொடரில் விளையாட வைப்பது என்பதில் இந்திய அணி நிர்வாகமும் இந்தியத் தேர்வுக்குழுவும் உறுதியாக இருக்கிறது. அவருடைய தேவை இந்திய கிரிக்கெட்டுக்கு இருப்பதை உணர்ந்து ஸ்ரேயாஸ் ஐயர் போல அவரை ஒதுக்காமல் வைத்திருக்கிறார்கள்.

- Advertisement -

புச்சி பாபு 2024

இந்த நிலையில் தமிழகத்தில் நடைபெற்ற புச்சி பாபு டெஸ்ட் தொடரில் இஷான் கிஷான் ஜார்கண்ட் அணிக்கு கேப்டனாக தலைமை தாங்கி பங்கேற்றார். அதில் முதல் போட்டியில் சதமும் அடித்தார். ஆனால் இரண்டாவது போட்டியில் இரண்டு இன்னிங்ஸ்களிலும் அவர் ஒற்றை இலக்கத்தில் வெளியேறினார்.

இதற்கு அடுத்து துலீப் ட்ராபிக்கு அறிவிக்கப்பட்ட இந்திய அணிகளில் ஸ்ரேயாஸ் அய்யர் தலைமையிலான இந்தியா டி அணியில் இடம் பெற்று இருந்தார். கடைசி நேரத்தில் காயம் காரணமாக அவர் விலகினார். இப்படியான நேரத்தில்தான் அவரை விடாப்பிடியாக கூட்டி வந்து கடைசி நொடியில் இன்று களம் இறக்கி இருக்கிறார்கள்.

- Advertisement -

ருதுராஜின் இந்திய சி அணி

முதல் சுற்றில் ஸ்ரேயாஸ் ஐயரின் டி அணியில் இடம் பெற்று இருந்த இஷான் கிஷான் இரண்டாவது சுற்றில் ருதுராஜின் சி அணியில் கடைசி நேரத்தில் சேர்க்கப்பட்டு இருக்கிறார். இவருடைய இடத்திற்கு டி அணியில் சஞ்சு சாம்சன் தேர்ந்தெடுக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே அவருக்கும் விளையாட வாய்ப்பு கொடுப்பதற்காக, இஷான் கிஷானை கடைசி நேரத்தில் இந்தியா சி அணியில் விளையாட வைத்து ஆச்சரியப்படுத்தி இருக்கிறார்கள்.

இதையும் படிங்க : ஒரு பவுலரா.. பும்ராகிட்ட இருந்து எதையுமே கத்துக்க முடியாது.. ஆனா இவர்கிட்ட நான் நிறைய விஷயங்களை எடுத்துக்கிறேன் – ஆர்சிபி வீரர் பேட்டி

இந்தியா சி அணி பிளேயிங் லெவன்

ருதுராஜ் கெய்க்வாட்(கே), இஷான் கிஷன், சாய் சுதர்சன், ரஜத் படிதார், பாபா இந்திரஜித், அபிஷேக் போரல்(வி.கீ), மானவ் சுதர், அன்ஷுல் கம்போஜ், மயங்க் மார்கண்டே, விஜய்குமார் வைஷாக் மற்றும் சந்தீப் வாரியர்.

- Advertisement -