2023 ஓடிஐ உலகக் கோப்பை அட்டவணை வெளியானது ; சென்னையில் 5 மேட்ச்!

0
6793
Odiwc2023

இந்த ஆண்டு அக்டோபர் நவம்பர் மாதங்களில் இந்தியாவில் வைத்து ஒருநாள் கிரிக்கெட் தொடர் உலகக்கோப்பை முதன்முறையாக முழுமையாக நடத்தப்பட இருக்கிறது!

10 அணிகளைக் கொண்டு நடத்தப்படும் இந்த உலகக்கோப்பையில் முதல் நான்கு இடங்களை பிடிக்கும் அணிகளை கொண்டு அரையிறுதி நடத்தப்பட்டு, அதிலிருந்து இறுதிப்போட்டியும், சாம்பியன் அணியும் கண்டறியப்படும்.

- Advertisement -

போட்டியை நடத்தும் இந்தியா, நடப்புச் சாம்பியன் இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா, தென்னாபிரிக்கா, நியூசிலாந்து, பாகிஸ்தான், பங்களாதேஷ் ஆப்கானிஸ்தான் ஆகிய எட்டு அணிகள் நேரடியாகத் தகுதி பெற்று இருக்கின்றன.

மீதி இரண்டு இடங்களுக்கான அணிகளைக் கண்டறிய தற்பொழுது ஜிம்பாப்வே நாட்டில் தகுதிச்சுற்று போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இந்தத் தகுதிச்சுற்றில் இறுதிப்போட்டிக்கு முன்னேறும் இரண்டு அணிகளும் உலகக்கோப்பைக்கு தகுதிபெறும்.

தற்பொழுது இந்தியாவில் நடக்கும் ஒருநாள் கிரிக்கெட் உலகக்கோப்பைக்கான முழு அட்டவணையும் வெளியிடப்பட்டு இருக்கிறது.

- Advertisement -

இந்த உலகக்கோப்பையின் முதல் போட்டியில் அக்டோபர் ஐந்தாம் தேதி இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகள் குஜராத் அகமதாபாத் மைதானத்தில் மோதிக் கொள்கின்றன.

இந்தியா தனது முதல் ஆட்டத்தில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் அக்டோபர் எட்டாம் தேதி ஆஸ்திரேலியா அணியை எதிர்த்து விளையாட இருக்கிறது.

இந்த உலகக்கோப்பை தொடரில் மிகவும் எதிர்பார்க்கப்படும் போட்டியான இந்தியா பாகிஸ்தான் அணிகள் மோதிக் கொள்ளும் போட்டி அக்டோபர் 15ஆம் தேதி குஜராத் அகமதாபாத் மைதானத்தில் நடக்கிறது.

இந்த உலகக் கோப்பை தொடரில் மொத்தம் ஐந்து போட்டிகள் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடக்கிறது. இதில் ஒரு போட்டியில் இந்திய அணி ஆஸ்திரேலிய அணியுடன் விளையாடுகிறது.

மேலும் பாகிஸ்தான் ஆப்கானிஸ்தான் அணிகள் சென்னையில் விளையாடுவதற்கும், ஆஸ்திரேலியா அணியுடன் பெங்களூரில் விளையாடுவதற்கும், இந்திய அணி உடன் அகமதாபாத் மைதானத்தில் விளையாடுவதற்கும் ஆட்சேபனை தெரிவித்து இருந்தது. ஆனால் இதற்கு ஐசிசி மற்றும் இந்திய கிரிக்கெட் வாரியம் சம்மதிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது!

முதல் அரை இறுதி மும்பையிலும் இரண்டாவது அரையிறுதி கொல்கத்தாவிலும் இறுதிப்போட்டி குஜராத் அகமதாபாத் மைதானத்திலும் நடக்கிறது. முழு அட்டவணை காண லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.