‘2023’ இந்தியன் பிரீமியர் லீக் வர்ணனையாளர்களின் பட்டியல் வெளியீடு!

0
4157

இந்தியாவின் கிரிக்கெட் திருவிழாவான ஐபிஎல் வருகின்ற மார்ச் மாதம் 31ஆம் தேதி முதல் துவங்கி நடைபெற இருக்கிறது. இந்தப் போட்டிகள் தூங்குவதற்கு 10 நாட்களே உள்ள நிலையில் ஐபிஎல் கொண்டாட்டங்கள் தற்போது களைகட்ட துவங்கி விட்டன. மொத்தம் பத்து அணிகள் பங்குபெறும் இந்த தொடர் ஐபிஎல் கிரிக்கெட்டின் 16வது சீசன் ஆகும்.

மொத்தம் 74 போட்டிகளைக் கொண்ட இந்த வருட ஐபிஎல் வருகின்ற 31ஆம் தேதி நடப்புச் சாம்பியன் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கிடையேயான போட்டியின் மூலம் துவங்குகிறது.கோவிட்-19 தொற்றுநோய் காரணமாக கடந்த மூன்று சீசன்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட மைதானங்களில் போட்டிகள் நடத்தப்பட்டு வந்த நிலையில் இந்த ஆண்டு முதல் ஹோம்-அவே என ஐபிஎல் போட்டிகள் பழைய வடிவத்தில் நடைபெற உள்ளதால் ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் இருக்கின்றனர் .

- Advertisement -

ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் ஐபிஎல் இன் அதிகாரப்பூர்வ ஒளிபரப்பு நிறுவனம் ஆகும். மேலும் இந்த நிறுவனம் ஹாட்ஸ்டார் என்ற இணையதள அப்ளிகேஷன் மூலமாக போட்டிகளை ஆன்லைனிலும் நேரடியாக ஒளிபரப்பு செய்கிறது. இந்நிலையில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் ஐபிஎல் போட்டிகளுக்கான வர்ணனையாளர்கள் பட்டியலை இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறது. ஹிந்தி மற்றும் ஆங்கிலம் தவிர்த்து தெலுங்கு தமிழ் கன்னடம் மராத்தி பெங்காலி என பிராந்திய மொழிகளிலும் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட இருக்கிறது . அந்தந்த மொழிகளிலும் அவற்றிற்கான ஒரு நடையாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர் .

வழக்கமான வர்ணனையாளர்கள் தவிர்த்து சமீபத்தில் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றுள்ள வீரர்கள் பலரும் இந்த பட்டியலில் இடம் பெற்றுள்ளனர் . ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் கேப்டன் ஆரோன் பின்ச் தென்னாப்பிரிக்க அணியின் முன்னாள் ஆல்ரவுண்டரும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் ஆல் ரவுண்டரான ஜாக் காலிஸ் இந்திய அணியின் முன்னாள் அதிரடி ஆட்டக்காரர் யூசுப் பதான் இந்திய அணியின் முன்னாள் துவக்க வீரரும் சிஎஸ்கே அணியின் முன்னாள் துவக்க வீரருமான முரளி விஜய் ஆகியோரும் இந்த பட்டியலில் இடம் பெற்றுள்ள முக்கிய வீரர்கள் ஆவர் .

ஆங்கில வர்ணனடையாளர்கள்:
சுனில் கவாஸ்கர், ஜாக் காலிஸ், மேத்யூ ஹைடன், கெவின் பீட்டர்சன், ஆரோன் ஃபின்ச், டாம் மூடி, பால் காலிங்வுட், டேனியல் வெட்டோரி, டேனியல் மாரிசன் மற்றும் டேவிட் ஹஸ்ஸி.

- Advertisement -

ஹிந்தி வர்ணனையாளர்கள்:
வீரேந்திர சேவாக், ஹர்பஜன் சிங், இர்பான் பதான், யூசுப் பதான், மிதாலி ராஜ், முகமது கைஃப், சஞ்சய் மஞ்ச்ரேக்கர், இம்ரான் தாஹிர், தீப் தாஸ்குப்தா, அஜய் மெஹ்ரா, பதம்ஜீத் செஹ்ராவத் & ஜதின் சப்ரு.

தமிழ் வர்ணனையாளர்கள்:
கே ஸ்ரீகாந்த், எஸ் பத்ரிநாத், லட்சுமிபதி பாலாஜி, எஸ் ரமேஷ், மற்றும் முரளி விஜய்.

- Advertisement -

தெலுங்கு வர்ணனையாளர்கள்:
வேணுகோபால் ராவ், ஆஷிஷ் ரெட்டி, எம்எஸ்கே பிரசாத், கல்யாண் கிருஷ்ணா, மற்றும் டி சுமன்.

கன்னட வர்ணனையாளர்கள்:
விஜய் பரத்வாஜ், சீனிவாச மூர்த்தி (ஜானி), ஜிகே அனில் குமார், பாலச்சந்திர அகில், பாரத் சிப்லி, பவன் தேஷ்பாண்டே மற்றும் குண்டப்பா விஸ்வநாத்.