தற்போது 2023-25 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சுழற்சி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் பாகிஸ்தான் அணி சொந்த நாட்டில் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை பங்களாதேஷ் அணியிடம் மொத்தமாக இழந்து இருக்கிறது. இதனால் இந்த புள்ளி பட்டியலில் மாற்றங்கள் ஏற்பட்டு இருக்கிறது.
பாகிஸ்தான் அணி தனது சொந்த நாட்டில் பங்களாதேஷ் அணிக்கு எதிராக இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. இதில் முதல் டெஸ்ட் போட்டியில் 10 விக்கெட் வித்தியாசத்திலும் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்திலும் தோல்வியடைந்து தொடரை 2-0 என இழந்தது.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சுழற்சி
இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சுழற்சியில் கடந்த ஆண்டு ஆரம்பித்து அடுத்த ஆண்டு வரையில் 2023-25 வரையிலான சுழற்சி நடைபெற்று வருகிறது. இந்த சுழற்சியின் இறுதியில் புள்ளி பட்டியலில் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் விளையாட தகுதி பெறும்.
தற்போது இந்த புள்ளி பட்டியலில் இந்திய அணி முதல் இடத்திலும் ஆஸ்திரேலியா அணி இரண்டாவது இடத்திலும் இருக்கின்றன. நியூசிலாந்து அணி மூன்றாவது இடத்தில் இருக்கிறது. இப்படியான நிலையில் இரண்டாவது மற்றும் மூன்றாவது இடத்தில் இருக்கும் இரண்டு அணிகளுக்கு எதிராகவும் இந்திய அணி அடுத்தடுத்த டெஸ்ட் தொடரில் விளையாட இருப்பதால் நிறைய சுவாரசியங்கள் காத்திருக்கிறது.
ஆச்சரியப்படுத்திய பங்களாதேஷ்
இந்த நிலையில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக அவர்களது நாட்டிலேயே இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை பங்களாதேஷ் அணி வென்ற காரணத்தினால் இங்கிலாந்தை தாண்டி தற்பொழுது நான்காவது இடத்தை பிடித்திருக்கிறது.
மேலும் நான்காவது இடத்தை பிடித்திருக்கும் பங்களாதேஷ் அணிக்கு எதிராகவும் இந்திய அணி அடுத்து இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. பாகிஸ்தானை ஆச்சரியப்படுத்தியது போல் இந்தியாவையும் பங்களாதேஷ் ஆச்சரியப்படுத்தினால் மூன்றாவது இடத்திற்கு முன்னேறும். அதே சமயத்தில் இந்திய அணியை இரண்டாவது இடத்துக்கு தள்ளிவிடும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : ரோகித் ஏபிடிக்கு இடமில்லை.. ஹர்ஷா போக்லே வெளியிட்ட ஆல் டைம் ஐபிஎல் XI.. 2 சிஎஸ்கே வீர்களுக்கு இடம்
2023-25 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியல்
இந்தியா – 68.52%
ஆஸ்திரேலியா – 62.50
நியூசிலாந்து – 50.00
பங்களாதேஷ் – 45.83
இங்கிலாந்து – 45.00
தென் ஆப்பிரிக்கா – 38.89
இலங்கை – 33.33
பாகிஸ்தான் – 19.05
வெஸ்ட் இண்டீஸ் – 18.52