இன்று நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி 63 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருக்கிறது. இதன் காரணமாக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் அதிரடியான மாற்றங்கள் ஏற்பட்டு இருக்கிறது.
இந்திய அணி உள்நாட்டில் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்களாதேஷ் அணிக்கு எதிராக விளையாடிக் கொண்டிருக்கிறது. இந்த நேரத்தில் இலங்கை அணி உள்நாட்டில் நியூசிலாந்து அணிக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது.
இந்திய அணிக்கு ஏற்பட்ட சாதகம்
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் மூன்றாவது இடத்தில் இருந்த நியூசிலாந்து அணியால் இந்திய அணியின் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி வாய்ப்புக்கு கொஞ்சம் நெருக்கடி இருக்க செய்தது. எனவே இலங்கை அணி வெற்றி பெற வேண்டியது முக்கியமாக இருந்தது.
இப்படியான நிலையில் இலங்கை அணி அதிரடியாக முதல் டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி வெற்றி பெற்று இருக்கிறது. இதன் காரணமாக மூன்றாவது இடத்தில் இருந்த நியூசிலாந்து அணி நான்காவது இடத்துக்கு சரிந்து இருக்கிறது. இலங்கை அணி தற்போது மூன்றாவது இடத்திற்கு முன்னேறி இருக்கிறது. இலங்கை அணிக்கும் இந்தியாவுக்கும் இனி போட்டிகள் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
2023-25 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியல்
தற்போது இந்த புள்ளி பட்டியலில் இந்திய அணி 71.67%, ஆஸ்திரேலியா அணி 62.50%, இலங்கை 50% என வெற்றி சதவீதத்தில் முதல் மூன்று இடங்களில் இருக்கின்றன. இந்திய அணிக்கு கொஞ்சம் நெருக்கடியை உண்டாக்கி கொண்டிருந்த நியூஸிலாந்து அணி தற்பொழுது 42.85% வெற்றி சதவீதத்துடன் நான்காவது இடத்திற்கு தள்ளப்பட்டு இருக்கிறது.
இதையும் படிங்க : 4 ஓவரில் மேட்சை முடித்த இலங்கை.. நியூசிலாந்து முதல் டெஸ்டில் தோல்வி.. இந்திய அணிக்கு WTC பைனலுக்கு சாதகம்
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியல் :
இந்தியா – 71.67
ஆஸ்திரேலியா – 62.50
இலங்கை – 50.00
நியூசிலாந்து – 42.85
இங்கிலாந்து – 42.19
பங்களாதேஷ் – 39.29
சவுத் ஆப்பிரிக்கா – 38.89
பாகிஸ்தான் – 19.05
வெஸ்ட் இண்டீஸ் – 18.52