2020 ஃபுட் டெலிவரி பாய்.. வருத்தமான ட்வீட்.. இன்று நெதர்லாந்து கதாநாயகன் – நேற்றைய போட்டியில் நடந்த சுவாரசிய சம்பவம்!

0
413
Netherlands

நேற்று ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் தென் ஆப்பிரிக்க அணியை வீழ்த்தி நெதர்லாந்து அணி அசத்தியிருக்கிறது.

நெதர்லாந்து அணியின் பேட்டிங்கை விட அந்த அணியின் பந்துவீச்சு மிகச் சிறப்பாக இருக்கிறது. தென் ஆப்பிரிக்க பேட்ஸ்மேன்கள் கொஞ்சம் ரிலாக்ஸ் செய்யக்கூட அவர்கள் அனுமதிக்கவே இல்லை.

- Advertisement -

நெதர்லாந்து பந்துவீச்சாளர்கள் தொடர்ந்து ஸ்டெம்ப்பை நோக்கி பந்தை வீசி, விளையாடியே ஆக வேண்டிய நெருக்கடியை கொடுத்து, பெரும்பாலும் போல்ட் முறையில் அவர்களை வெளியேற்றினார்கள்.

தரம்சாலா மைதானம் மிகவும் சிறிய மைதானம். இங்கு பவுண்டரிகள் அடிப்பது மிகவும் எளிதான ஒன்றாக இருக்கிறது. இந்த நிலையில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க கேப்டன் முதலில் பந்துவீச்சை தேர்ந்தெடுத்து விட்டார். இதைத்தான் டெல்லியிலும் ஜோஸ் பட்லர் செய்து இங்கிலாந்து தோற்றது.

- Advertisement -

நேற்றைய போட்டியில் 30 வயதான நெதர்லாந்து வலது கை வேத பந்துவீச்சாளர் பால் வான் மீக்கரன் எய்டன் மார்க்ரம் மற்றும் மார்க்கோ ஜான்சன் இருவர்து விக்கட்டையும் போல்ட் முறையில் கைப்பற்றினார்.

இவர் 2013 ஆம் ஆண்டு முதல் நெதர்லாந்து அணிக்காக விளையாடி வருகிறார். ஆனால் இவருடைய பொருளாதார நிலை பெரிய அளவில் கிடையாது. இவர் கிரிக்கெட் விளையாடி கொண்டு நெதர்லாந்தில் ஃபுட் டெலிவரி செய்யும் வேலை செய்து வந்தார்.

2020 ஆம் ஆண்டு கிரிக்கெட் விளையாடுவதை தவறவிட்டு, பொருளாதாரத்திற்காக ஃபுட் டெலிவரி செய்து கொண்டிருந்த அவர், அப்பொழுது வருத்தமாக சமூக வலைதளத்தில் பதிவு செய்த ட்வீட் ஒன்று தற்பொழுது வைரல் ஆகிறது.

அந்த டிவிட்டில் “நான் இன்று கிரிக்கெட் விளையாடி இருக்க வேண்டும். ஆனால் குளிர்காலத்தை கடப்பதற்காக நான் உணவு டெலிவரி செய்து கொண்டிருக்கிறேன். விஷயங்கள் எப்படி எல்லாம் மாறுகிறது. ஆனால் மக்கள் எப்பொழுதும் சிரித்துக் கொண்டே இருங்கள்!” என்று கூறியிருக்கிறார். நேற்றைய அவருடைய செயல்பாட்டுக்கு நெதர்லாந்து அவரை பல காலம் ஞாபகம் வைத்திருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது!

- Advertisement -