2விக்கெட்.. 45பந்து.. 37ரன்கள்.. இலங்கை ஜிம்பாப்வே போட்டியில் உச்சக்கட்ட பரபரப்பு.. அசத்தலான முடிவு!

0
659
Zimbabwe

ஜிம்பாபே கிரிக்கெட் அணி தற்பொழுது இலங்கைக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் செய்திருக்கிறது. இந்த சுற்றுப்பயணத்தில் தலா மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் மற்றும் டி20 கிரிக்கெட் தொடர்கள் நடைபெறுகின்றன.

இதில் முதலில் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெறுகிறது. இந்தத் தொடரின் முதல் போட்டி மழையால் பாதிக்கப்பட்ட காரணத்தினால் இருவருக்கும் வெற்றி தோல்வி இல்லாமல் முடிவுக்கு வந்தது.

- Advertisement -

இந்த நிலையில் இன்று இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் முதலில் ஜிம்பாப்வே அணி பேட்டிங் செய்தது. ஆடுகளம் பந்து வீச்சுக்கு கொஞ்சம் சாதகமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

முதலில் பேட்டிங் செய்த ஜிம்பாப்வே அணிக்கு கேப்டன் கிரேஜ் எர்வின் 82 ரன்கள், ரியான் பர்ல் 31, கும்பி 30 ரன்கள் எடுக்க, ஜிம்பாவே அணி 44.4 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 208 ரன்கள் மட்டும் எடுத்தது. இலங்கை அணியின் தரப்பில் மதிஷா தீக்ஷனா ஐந்து விக்கெட்டுகள் கைப்பற்றினார்.

இதற்கடுத்து இலக்கை நோக்கி விளையாட ஆரம்பித்த இலங்கை அணிக்கு ஜிம்பாப்வே பந்துவீச்சாளர்கள் சரியான பதிலடி திருப்பி தர ஆரம்பித்தார்கள்.

- Advertisement -

இலங்கை அணியின் முன்னணி வீரர்கள் அவிஷ்கா பெர்னாடோ 4, குசால் மெண்டிஸ் 17, சதிர சமரவிக்ரமா 4, சரித் அசலங்கா 0, டசன் சனகா 7 என சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்து வெளியேறினார்கள்.

இந்த நிலையில் ஜனித் லியாங்கே ஒரு முனையில் பொறுமையாக நின்று விளையாடி 127 பந்துகளில் 95 ரன்கள் எடுத்து கொடுத்தார். இவருடன் இணைந்து சகான் 21, தீக்ஷனா 18 ரன்கள் எடுத்தார்கள்.

இலங்கை அணி ஒரு கட்டத்தில் 42.3 ஓவர்களில் எட்டு விக்கெட் இழப்புக்கு 172 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது. மேற்கொண்டு 42 பந்துகளில் 37 ரன்கள் வெற்றிக்கு தேவைப்பட்டது. கைவசம் இரண்டு விக்கெட்டுகள் மட்டுமே இருந்தது.

இந்த நிலையில் இலங்கை அணியின் வேகப்பந்துவீச்சாளர் சமீரா மற்றும் ஜெஃப்ரி வாண்டர்சே இருவரும் இணைந்து பொறுப்புடன் விளையாடி, 6 பந்துகள் மீதம் இருந்த நிலையில் அணியை வெற்றி பெற வைத்தனர். இரண்டு விக்கட்டுகளை இறுதியில் கைப்பற்ற முடியாமல் பரபரப்பான போட்டியில் ஜிம்பாப்வே தோல்வி அடைந்தது. ஜிம்பாப்வே தரப்பில் நகர்வா ஐந்து விக்கெட் கைப்பற்றினார்!