இன்னிங்ஸ் வெற்றியை நோக்கி இந்திய அணி; அக்ஸர் பட்டேல் & ஜடேஜா அபாரம்; ருத்ர தாண்டவம் ஆடிய ஷமி; 400 ரன்களுக்கு இந்தியா ஆல் அவுட்!

0
1342

முதல் இன்னிங்சில் 400 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது இந்திய அணி. 223 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.

நாக்பூர் மைதானத்தில் நடைபெற்று வரும் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா அணி, இந்திய சுழல் பந்துவீச்சாளர்களின் மாயாஜால சூழலில் சிக்கி 177 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

- Advertisement -

முதல் நாள் முடிவில் இந்திய அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 77 ரன்கள் அடித்திருந்தது. அதைத் தொடர்ந்து இரண்டாம் நாள் ஆட்டத்தை தொடர்ந்த இந்திய அணி கூடுதல் நிதானத்துடன் விளையாடியது.

ஒருபுறம் டாப் ஆர்டர் பேட்ஸ்மென்ட்கள் வரிசையாக விக்கெட்டுகளை இழந்தாலும், கேப்டன் ரோகித் சர்மா நிலைத்த ஆடி தனது ஒன்பதாவது டெஸ்ட் சதத்தை பூர்த்தி செய்தார். அவர் 120 ரன்கள் அடித்து ஆட்டம் இழந்தார்.

அதன் பிறகு உள்ளே வந்த அக்சர் பட்டேல் மற்றும் ஜடேஜா இருவரும் கீழ் வரிசையில் பார்ட்னர்ஷிப் அமைத்து பொறுப்புடன் விளையாடி அணியின் ஸ்கோரை மேலே எடுத்துச் சென்றனர். இருவருமே அரைசதம் கடந்து நன்றாக விளையாடி வந்தனர்.

- Advertisement -

இரண்டாம் நாள் முடிவில் இந்திய அணி 7 விக்கெட் இழப்பிற்கு 321 ரன்கள் அடித்து, 144 ரன்கள் முன்னிலை பெற்றிருந்தது. அதைத் தொடர்ந்து இன்று மூன்றாம் நாள் ஆட்டத்தை தொடர்ந்த இந்திய அணிக்கு ஜடேஜா 70 ரன்கள் அடித்து ஆட்டம் இழந்தார்.

அடுத்து உள்ளே வந்த முகமது ஷமி, ஆஸ்திரேலியா ஸ்பின்னர்களின் பந்துவீச்சை பவுண்டரி மற்றும் சிக்சர்களாக விளாசினார். இவர் மூன்று சிக்ஸர்கள் மற்றும் இரண்டு பவுண்டரிகள் உட்பட 37 ரன்கள் அடித்து அவுட் ஆகினார்.

போட்டியின் கடைசி விக்கெட் வரை போராடிய அக்சர் பட்டேல் 84 ரன்களுக்கு ஆட்டமிழக்க இந்திய அணி 400 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் 223 ரன்கள் முன்னிலை பெற்றிருக்கிறது. ஆஸ்திரேலிய அணிக்கு அறிமுக வீரர் டாட் மர்பி 7 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். பேட் கம்மின்ஸ் இரண்டு விக்கெட்களும் நாதன் லயன் ஒரு விக்கட்டும் வீழ்த்தினர்.

இந்திய மைதானங்களில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 200+ ரன்கள் லீடிங் வைத்துள்ள அனைத்து போட்டிகளிலும் இதுவரை இன்னிங்ஸ் வெற்றியை பெற்றிருக்கிறது. இதற்கு முன்னர் பத்து முறை இதுபோன்று நிகழ்ந்திருக்கிறது. தற்போது 11வது முறையாக 200+ ரன்கள் முன்னிலை பெற்று இருக்கிறது. ஆகையால் இம்முறையும் இந்திய அணி இன்னிங்ஸ் வெற்றியை பெறும் என்று எதிர்பார்ப்பும் நிலவுகிறது.