வீடியோ: ஸ்டம்ப்பை பறக்கவிட்டு.. முதல் விக்கெட்டை கெத்தாக எடுத்து… பவர்-பிளேல என்னை மிஞ்ச எவன்டா இருக்கான்னு காட்டிய சிராஜ்..!

0
372

பவர்-பிளே ஓவரில் ஸ்டம்பை பறக்கவிட்டு முதல் விக்கெட்டை கெத்தாக எடுத்த முகமது சிராஜ் செய்த சம்பவத்தின் வீடியோவை கீழே காண்போம்.

ஆஸ்திரேலியா அணி இந்தியாவிற்கு வந்து முதற்கட்டமாக நான்கு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடியது டெஸ்ட் தொடரில் தொடர்ந்து நான்காவது முறையாக ஆஸ்திரேலியா அணியை வீழ்த்தி கோப்பையையும் கைப்பற்றியது இந்திய அணி.

- Advertisement -

டெஸ்ட் தொடர் முடிவுற்றவுடன் இரு அணிகளுக்கும் இடையேயான மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர் இன்று மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் துவங்கியுள்ளது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

ஆஸ்திரேலியா அணியின் நட்சத்திர துவக்க வீரர் டேவிட் வார்னர் காயத்திலிருந்து இன்னும் முழுமையாக குணமடையவில்லை என்பதால், இன்றைய போட்டியில் அவர் இல்லை. துவக்க வீரர்களாக டிராவிஸ் ஹெட் மற்றும் மிட்ச்சல் மார்ஸ் இருவரும் களமிறங்கினர்.

போட்டியின் முதல் ஓவரை முகமது சமி வீசினார். இதில் துவக்க வீரர்கள் இருவரும் மிகவும் திணறினர். இரண்டாவது ஓவரை முகமது சிராஜ் வீசியபோது, டிராவிஸ் ஹெட் எதிர்கொண்டார். இந்த ஓவரின் முதல் சில பந்துகளை தட்டு தடுமாறி எதிர்கொண்டார். அடுத்த பந்தில் பவுண்டரி அடித்து சற்று ஆறுதலடைய, அதற்கு அடுத்த பந்தை அபாரமாக வீசி போல்ட் எடுத்தார் முகமது சிராஜ்.

- Advertisement -

டெஸ்ட் போட்டிகளில் நல்ல பார்மில் இருந்த டிராவிஸ் ஹெட், ஆரம்பத்திலேயே ஆட்டம் இழந்தது இந்திய அணிக்கு சாதகமாக துவங்கியிருக்கிறது. தற்போது களத்தில் ஸ்மித், மிட்ச்சல் மார்ஸ் இருவரும் விளையாடி வருகின்றனர்.

வீடியோ:

இந்த முதல் ஒருநாள் போட்டியில் இந்தியாவின் கேப்டன் ரோகித் சர்மா சொந்த காரணங்களுக்காக விளையாடவில்லை. ஆகையால் இந்த தொடரில் முதல்முறையாக துணைகேப்டனாக நியமிக்கப்பட்டிருந்த ஹார்திக் பாண்டியா கேப்டன் பொறுப்பேற்று விளையாடி வருகிறார்.

இந்திய அணி மூன்று ஆல் ரவுண்டர்களுடன் இந்த போட்டியில் அணுகுகிறது. ஹர்திக் பாண்டியா உட்பட சர்துல் தாக்கூர் மற்றும் ஜடேஜா ஆகியோர் இருக்கின்றனர். வேகப்பந்துவீச்சில் முகமது சிராஜ் மற்றும் முகமது சமி விளையாடுகின்றனர். சுழல் பந்துவீச்சில் ஜடேஜா உடன் சேர்ந்து குல்தீப் யாதவ் பிளேயிங் லெவனில் இருக்கிறார்.