198-10.. 199-1.. இலங்கை அணிக்கு பதிலடி தந்த ஆப்கான்.. இப்ராகிம் ஜட்ரன் ஸ்பெஷல் சதம்

0
242
Ibrahim

ஒரே ஒரு டெஸ்ட் போட்டியில் விளையாடுவதற்கு ஆப்கானிஸ்தான் அணி இலங்கை நாட்டிற்கு வந்திருக்கிறது.

நேற்று முன்தினம் கொழும்பு மைதானத்தில் தொடங்கிய இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான அணி 198 ரன்கள் எடுத்து சுருண்டது. அந்த அணியின் ரஹ்மத் ஷா மட்டும் போராடி 91 ரன்கள் எடுத்தார்.

- Advertisement -

இதற்கு அடுத்து இலங்கை அணிக்கு தினேஷ் சண்டிமால் மற்றும் அனுபவ வீரர் ஏஞ்சலோ மேத்யூஸ் இருவரும் சதம் அடித்தார்கள். இலங்கையணி முதல் இன்னிங்ஸில் 439 ரன்கள் எடுத்தது.

ஆப்கானிஸ்தான அணி 241 ரன்கள் பின்தங்கிய நிலையில் தன்னுடைய இரண்டாவது இன்னிங்ஸை மூன்றாவது நாளான இன்று துவங்கியது.

சுழல் பந்துவீச்சுக்கு சாதகமான இலங்கை மைதானத்தில் அனுபவமற்ற ஆப்கானிஸ்தான் அணி இன்னிங்ஸ் தோல்வி அடைந்து விடும் என பலரும் எதிர்பார்த்து இருந்தார்கள்.

- Advertisement -

இப்படியான நிலையில் ஆப்கானிஸ்தான் அணியின் துவக்க ஆட்டக்காரர்கள் இப்ராஹிம் ஜட்ரன் மற்றும் நூர் அலி ஜட்ரன் இருவரும் சேர்ந்து முதல் விக்கெட்டுக்கு 106 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அசத்தினார்கள். நூர் அலி ஜட்ரன் 47 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தார்.

இதைத்தொடர்ந்து ரஹமத் ஷா விளையாட வந்தார். இப்ராகிம் ஜட்ரன் தொடர்ந்து மிகச்சிறப்பாக விளையாடி முதல்சதத்தை அடித்து பிரமாதப்படுத்தினார்.

இன்று மூன்றாவது நாள் ஆட்ட நேர முடிவில் ஆப்கானிஸ்தான் அணி ஒரு விக்கெட்டை மட்டுமே இழந்து 199 ரன்கள் எடுத்திருக்கிறது. இன்னும் 42 ரன்கள் மட்டுமே பின் தங்கியிருக்கும் ஆப்கானிஸ்தான், எப்படியும் இன்னிங்ஸ் தோல்வியை தவிர்த்து விடும் என்பது உறுதியாகி இருக்கிறது.

இதையும் படிங்க : இங்கிலாந்து லயன்சை வீழ்த்தியது இந்திய அணி.. ஸ்ரேயாஸ் நீக்கப்பட்டால் அவர் இடம் யாருக்கு?

முதல் இன்னிங்ஸில் 199 ரன்களுக்கு 10 விக்கெட்டை இழந்த ஆப்கானிஸ்தான், இரண்டாவது இன்னிங்ஸில் 199 ரன்கள் ஒரு விக்கெட்டை மட்டுமே இழந்து, அனுபவ இலங்கை அணிக்கு அபாரமான சவாலை கொடுத்திருக்கிறது.