50 பந்தில் 18 ரன்.. அடுத்து 122 பந்தில் சதம்.. ஜெய்ஸ்வால் முதல் முறையாக சாதனை.. மிரட்டல் பேட்டிங்

0
824
Jaiswal

இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் மூன்றாவது போட்டியின் மூன்றாவது நாளில், இந்திய அணியின் கைகள் கொஞ்சம் கொஞ்சமாக ஓங்கி வருகிறது.

இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 445 ரன்கள் எடுத்திருக்க, இங்கிலாந்து அணி 224 ரன்கள் இரண்டு விக்கெட் என்கின்ற வலிமையான நிலையில் இருந்து, 319 ரன்கள் மட்டுமே மொத்தமாக எடுத்து ஆல் அவுட் ஆகியது.

- Advertisement -

இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 126 ரன்கள் முன்னிலை பெற்றது. இதற்கு அடுத்து தனது இரண்டாவது இன்னிங்ஸை துவங்கிய இந்திய அணிக்கு கேப்டன் ரோஹித் சர்மா முதலிலேயே வெளியேறினார். மீண்டும் ஒரு இரண்டாவது இன்னிங்ஸ் சரிவு இந்திய அணிக்கு இருக்குமா? என்று ரசிகர்கள் அச்சப் பட்டார்கள்.

இப்படியான நிலையில் தேநீர் இடைவேளைக்கு சென்று வந்த இந்திய அணியின் இளம் ஜோடிகள் ஜெய்ஸ்வால் மற்றும் சுப்மன் கில் இருவரும் மேற்கொண்டு பொறுமையாக விளையாட ஆரம்பித்தார்கள்.

இப்படியான நிலையில் இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் பீல்டர்களை உள்ளே கொண்டு வந்து ஜேம்ஸ் ஆண்டர்சன் வைத்து தாக்குதல் நடத்த திட்டமிட்டார். ஆனால் இதற்கு ஜெய்ஸ்வால் வேறொரு திட்டத்தை வைத்திருந்தார்.

- Advertisement -

இங்கிலாந்து பீல்டர்கள் எப்பொழுது உள்ளே வருவார்கள் என்று காத்துக் கொண்டிருந்த ஜெய்ஸ்வால், ஆண்டர்சனின் ஓவரில் தைரியமாக 6,4,4 என்று நொறுக்கினார். இதற்கு அடுத்த ஓவரில் டாம் ஹார்ட்லியை அடுத்தடுத்து 6,6 என அடித்து விரட்டினார். உடனடியாக இருவருக்குமே ஓவர்களை கேப்டன் ஸ்டோக்ஸ் நிறுத்திவிட்டார்.

மேலும் இதன் மூலமாக அதிரடியாக ஜெய்ஸ்வால் தனது அரை சதத்தை அடித்தார். இந்த அரை சதம் அவருக்கு டெஸ்ட் கிரிக்கெட்டில் இரண்டாவது இன்னிங்ஸில் வந்த முதல் அரைசதம் ஆகும். இதுவரை அவருக்கு சதம் மற்றும் அரை சதங்கள் முதல் இன்னிங்ஸில் மட்டுமே வந்திருக்கிறது.

இதையும் படிங்க : “அஷ்வின் திரும்பி வந்தால்.. உடனே பந்து வீச அனுமதி கிடைக்குமா?” – தினேஷ் கார்த்திக் மகிழ்ச்சியான செய்தி

தற்பொழுது இரண்டாவது இன்னிங்சிலும் தன்னால் விளையாட முடியும் என்பதை காட்டியிருக்கிறார். மேலும் ஆரம்பத்தில் கொஞ்சம் பொறுமையாக பந்துகளை எடுத்ததை அதிரடியின் மூலமாக தற்பொழுது ஈடுகட்டி இந்திய கிரிக்கெட் ரசிகர்களை மகிழ்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறார். மேலும் இந்த தொடரில் 400 ரன்களை கடந்திருக்கிறார்.