கிரிக்கெட் செய்திகள் | Daily Cricket News in Tamil

சர்வதேச கிரிக்கெட்டில் ரஷித் கானின் உலக சாதனையை உடைத்த 16 வயது வீரர்!

உலகின் மிகப்பெரிய வணிக ரீதியாக வெற்றியடைந்த விளையாட்டுகளாக கால்பந்து, டென்னிஸ், அமெரிக்காவின் கூடைப்பந்து ஆகிய விளையாட்டுகள் விளங்கி வருகின்றன!

- Advertisement -

இந்த வகையில் இந்தியாவில் டி20 வடிவத்தில் ஐபிஎல் தொடர் ஆரம்பிக்கப்பட்ட பின்பு கிரிக்கெட் வணிக ரீதியாக பெரிய அளவில் உயர்ந்திருக்கிறது.

கிரிக்கெட் வணிக ரீதியாக மிக உயரமான இடத்தை எட்டுவதற்கு முக்கியமான காரணமாக டி20 கிரிக்கெட்தான் இருந்து வருகிறது. ஏனென்றால் மற்ற இரு கிரிக்கெட் வடிவங்களை விட டி20 கிரிக்கெட் வடிவம் எளிமையானது.

இந்த காரணத்தால் கிரிக்கெட் இதுவரை சென்றடையாத நாடுகளை எல்லாம் வெகு வேகமாக சென்று சேர்ந்து கொண்டிருக்கிறது. கிரிக்கெட் தற்காலத்தில் விரைவாக உலகமயமாகிக் கொண்டு இருக்கிறது.

- Advertisement -

இதனால் டி20 கிரிக்கெட்டுக்கு உலகம் எங்கும் மிகப்பெரிய வரவேற்பு இருக்கிறது. இதனால் ஐசிசி இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை டி20 கிரிக்கெட் வடிவத்திற்கான உலகக் கோப்பையை நடத்துகிறது.

அடுத்த வருடம் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடக்க இருக்கும் டி20 உலகக்கோப்பைக்கான ஆசிய பசிபிக் தகுதி சுற்று போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்த 16 வயது இளைஞர் ஒருவர் டி20 கிரிக்கெட்டில் பந்துவீச்சில் புதிய சாதனையை படைத்திருக்கிறார்.

இவர் அடுத்த வருட டி20 உலக கோப்பைக்கான தகுதிச்சுற்று போட்டி ஒன்றில் ஐந்து விக்கட்டுகளை கைப்பற்றியதின் மூலம் குறைந்த வயதில் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் ஐந்து விக்கெட்டுகளை கைப்பற்றிய பந்துவீச்சாளர் என்ற உலக சாதனையை படைத்திருக்கிறார்.

இதற்கு முன்பாக 2017 ஆம் ஆண்டு அயர்லாந்து அணிக்கு எதிராக 18 வயது 171 நாட்களில் ரஷித் கான் 5 விக்கெட்டுகளை கைப்பற்றி குறைந்த வயதில் ஐந்து விக்கெட் கைப்பற்றிய பந்துவீச்சாளராக உலக சாதனை படைத்திருந்தார்.

ரஷித் கானின் இந்த சாதனையை 2021ஆம் ஆண்டு நைஜீரியாவுக்கு எதிராக சியாரோ லியோன் நாட்டைச் சேர்ந்த 18 வயது 29 நாட்கள் ஆன சாமுவேல் காண்டோ முறியடித்து இருந்தார்.

தற்பொழுது இந்தச் சாதனையை பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்த 16 வயதான வேகப்பந்துவீச்சாளர் கெப்லர் லுக்கீஸ் முறியடித்து இருக்கிறார். இவர் தகுதிச்சுற்றுப் போட்டியில் வனவடு அணிக்கு எதிராக 16 வயது 145 நாட்களில் ஐந்து விக்கெட்டுகளை கைப்பற்றி, மிகக்குறைந்த வயதில் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் ஐந்து விக்கெட் கைப்பற்றிய பந்துவீச்சாளர் என்ற உலக சாதனையை படைத்திருக்கிறார்!

- Advertisement -
Published by

Recent Posts