“14 கோடி ரொம்ப அதிகம்ங்க” கேன் வில்லியம்சனை நீக்குகிறதா சன் ரைசர்ஸ்? – எஸ்ஆர்எச் கோச் பேட்டி!

0
703

எந்த ஒரு வீரருக்கும் 14 கோடி மிகவும் அதிகம் என்று சமீபத்திய பேட்டியில் கூறி இருக்கிறார் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் பயிற்சியாளர் டாம் மூடி.

ஐபிஎல் 2023 ஆம் ஆண்டுக்கான மினி ஏலம் வருகிற டிசம்பர் மாதம் நடைபெறுகிறது. இந்த ஏலத்திற்கு முன்பு வீரர்களை பரிமாற்றம் மற்றும் அணியில் இருந்து வெளியேற்றம் செய்ய நவம்பர் 15ஆம் தேதி வரை கால அவகாசத்தை ஒவ்வொரு அணிக்கும் கொடுத்து இருக்கிறது ஐபிஎல் நிர்வாகம்.

- Advertisement -

அந்த வரிசையில் சென்னை, பெங்களூரு, மும்பை போன்ற முன்னணி அணிகள் தங்களது அணியிலிருந்து சில வீரர்களை வெளியேற்ற தயாராகி வருகின்றன. கொல்கத்தா அணி சில வீரர்களை வேறொரு அணியில் இருந்து பெற்று இருக்கிறது. இதற்கான அறிவிப்பும் நவம்பர் 15ல் வெளியிடப்படும்.

இந்த வரிசையில் ஹைதராபாத் அணி சில வீரர்களை தக்க வைத்திருக்கிறது. ஆனால் தற்போது வரை கேன் வில்லியம்சனின் இடம் ஹைதராபாத் அணியில் கேள்விக்குறியாக இருக்கிறது.

கேன் வில்கியம்சன் தக்கவைக்கப்படுவாரா? மாட்டாரா? என்ற விவரங்கள் தற்போது வரை தெரியவில்லை. இது குறித்து சமீபத்திய பேட்டியில் ஹைதராபாத் அணியின் பயிற்சியாளர் டாம் மூடி பேசியுள்ளார்.

- Advertisement -

“கடந்த வருடம் நடைபெற்ற மிகப்பெரிய ஏலத்திற்கு முன்பு கேன் வில்லியம்சன் போன்ற வீரரை 14 கோடிக்கு தக்க வைத்தோம். இவருக்கு இத்தகைய விலை கொடுக்கும்போதே அணியின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு இந்த முடிவை எடுத்தோம் என்று பலருக்கும் புரிந்திருக்கும்.

ஆனால் கடைசி நான்கு ஐந்து மாதங்களாக கேன் வில்லியம்சன் விளையாடி வரும் விதம் எங்களுக்கு திருப்தி அளிக்கவில்லை. அது அவரது திறமைக்கு சமமானது இல்லை.” என்றார்.

மேலும், “கேன் வில்லியம்சனுக்கு 14 கோடி ரூபாய் சரியா? என்ற கேள்விக்கு பதில் அளித்த மூடி,

“வில்லியம்சன் மிகச்சிறந்த கேப்டன். சர்வதேச அணியையும் வழி நடத்துகிறார். அவருக்கு என்று தனி மரியாதை உண்டு. ஹைதராபாத் அணியில் மட்டுமல்லாது, வெளி அணிலும் அவருக்கு மரியாதை உண்டு. நாங்கள் அவரை வைத்து இருக்கிறோமா? இல்லையா? என்பது இங்கு கேள்வி இல்லை. ஆனால் 14 கோடி என்பது எந்த ஒரு வீரருக்கும் மிக அதிக விலை தான் என்று மறுக்காமல் கூறுவேன். அணி நிர்வாகத்திடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். 15 ஆம் தேதி இறுதிக்குள் இது குறித்த முடிவுகளை எடுப்போம். எதிர்காலம் தான் எங்களுக்கு முக்கியம்.” என்றார்.