12 வருடங்கள்.. உலக கோப்பை இறுதி போட்டியில் இந்தியா.. சமி விக்கெட் வேட்டை.. நியூசிலாந்துக்கு ரிவென்ஞ்!

0
767
Shami

இன்று மும்பை வான்கடே மைதானத்தில் ஒருநாள் கிரிக்கெட் உலகக்கோப்பையின் முதல் அரையிறுதி போட்டியில், இந்தியா நியூசிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்ற போட்டியில், பரபரப்பான முறையில் இந்திய அணி வெற்றி பெற்று இருக்கிறது.

டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த அணிக்கு ரோகித் சர்மா 47, சுப்மன் கில் 80, விராட் கோலி 117, ஸ்ரேயாஸ் ஐயர் 105, கே எல் ராகுல் 39*, சூரியகுமார் யாதவ் 1 என ரன்கள் எடுக்க 50 ஓவர்கள் முடிவில் இந்திய அணி நான்கு விக்கெட் இழப்புக்கு 397 ரன்கள் குவித்தது.

- Advertisement -

இதற்கு அடுத்து இமாலய இலக்கை நோக்கி களம் இறங்கிய நியூசிலாந்து அணி, இந்திய அணியின் அபார பந்துவீச்சின் மூலமாக எளிதாக வெற்றியை விட்டுத் தந்துவிடும் என்ற இந்திய ரசிகர்கள் எதிர்பார்த்தார்கள். ஆனால் நியூசிலாந்து அவ்வளவு எளிதில் பணியவில்லை.

நியூசிலாந்து அணியின் துவக்க ஆட்டக்காரர்கள் கான்வே 13, ரச்சின் ரவீந்தரா 13 ரன்கள் எடுத்து வெளியேறினார்கள். இதற்கு அடுத்து கேப்டன் கேன் வில்லியம்சன் மற்றும் டேரில் மிட்சல் இருவரும் ஜோடி சேர்ந்து முதலில் பொறுமையாக விளையாடி பின்பு அதிரடியில் ஈடுபட்டனர்.

மிகச் சிறப்பாக விளையாடிய இருவரும் இந்திய அணிக்கு பயத்தை கொடுத்து அரை சதத்தை கடந்தார்கள். இந்த நிலையில் கேன் வில்லியம்சன் தந்த எளிய கேட்ச் வாய்ப்பை முகமது சமி தவறவிட்டார். இதற்கு அடுத்து ஆட்டத்தில் பெரிய பரபரப்பு ஏற்பட்டது.

- Advertisement -

இந்த நிலையில் பந்து வீச வந்த முகமது சமி கேன் வில்லியம்சன் 69, டாம் லாதம்,0 அடுத்தடுத்து இரண்டு விக்கெட் கைப்பற்றி, கேட்ச் விட்டதற்கு பரிகாரம் செய்தார். ஆனால் இதற்குப் பிறகும் இந்திய அணிக்கு அச்சுறுத்தல் நிற்கவில்லை.

இதற்கு அடுத்து ஜோடி சேர்ந்த டேரில் மிட்சல் மற்றும் கிளன் பிலிப்ஸ் இருவரும் அதிரடியில் ஈடுபட்டார்கள். இதனால் கேப்டன் ரோஹித் சர்மாவை சீக்கிரமாகக் கடைசிக் கட்டத்தில் கொண்டு வந்தார். அதற்கு கைமேல் பலனாக கிளன் பிலிப்ஸ் பும்ரா பந்துவீச்சில் 41 ரன்கள் எடுத்து வெளியேறினார். உடனே சாப்மேன் விக்கெட்டை குல்தீப் யாதவ் 2 ரன்களில் கைப்பற்றினார்.

இதற்கு அடுத்து மீண்டும் மூன்றாவது ஸ்பெல்லுக்கு வந்த முகமது சமி அபாயகரமாக விளையாடிக் கொண்டிருந்த டேரில் மிட்சல் 134 ரன்கள் எடுத்து விளையாடிக் கொண்டிருந்த பொழுது வீழ்த்தி ஆட்டத்தை முழுமையாக இந்திய அணி பக்கம் கொண்டு வந்தார். இதன் மூலம் ஐந்து விக்கட்டுகளை இந்த உலகக் கோப்பையில் மூன்றாவது முறையாக கைப்பற்றினார்.

இதற்கு அடுத்து சிராஜ் ஒரு விக்கெட் மற்றும் முகமது சமி இரண்டு விக்கெட் என கைப்பற்ற, 48.5 ஓவர்களில் நியூசிலாந்து அணி 327 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் 70 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்று முதல் அணியாக நடப்பு உலக கோப்பைத் தொடர் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்று இருக்கிறது. 12 வருடங்கள் கழித்து ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை இறுதிப் போட்டிக்கு இந்திய அணி தகுதி பெற்று இருக்கிறது.

இந்த போட்டியில் இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர் முகமது சமி 9.5 ஓவர்கள் பந்துவீசி 57 ரன்கள் கொடுத்து ஏழு விக்கெட்டுகளை வீழ்த்தி, இந்திய அணியின் வெற்றிக்கு இரண்டாவது பகுதியில் மிக முக்கிய காரணமாக இருந்தார்.