இந்திய கிரிக்கெட்

2024ஆம் ஆண்டு.. ஓய்வு பெற்ற 12 இந்திய வீரர்கள்.. ஆச்சரியம் அளிக்கும் நீண்ட பட்டியல்.. முழு தகவல்கள்

நடப்பு 2024 ஆம் ஆண்டில் இந்திய வீரர்கள் 12 பேர் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றிருக்கிறார்கள். இதில் சிலர் குறிப்பிட்ட வடிவத்தில் இருந்து மட்டும் ஓய்வு பெற்றிருக்கிறார்கள். இவர்கள் யார்? என்பது குறித்து பார்க்கலாம்.

- Advertisement -

சௌரப் திவாரி
தனது 17 வது வயதில் தனது மாநில ஜார்க்கண்ட் அணிக்கு முதல் தர கிரிக்கெட்டில் அறிமுகமாகி, 2019 ஆம் ஆண்டு இந்திய அணிக்காகவும் அறிமுகமாகி, இந்த ஆண்டு ரஞ்சி தொடரில் பிப்ரவரி மாதத்தில் மொத்த கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெற்றார்.

வருண் ஆரோன்
வலது கை வேகப்பந்து வீச்சாளரான இவர் 2011 ஆம் ஆண்டு முதல் 2015 ஆம் ஆண்டு வரை இந்திய அணிக்காக விளையாடி 29 விக்கெட்டுகள் எடுத்தார். இந்த வருடத்துடன் எல்லா வகையான கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெற்றார்.

தினேஷ் கார்த்திக்
2004 ஆம் ஆண்டு முதல் 2022 ஆம் ஆண்டு வரையில் இந்திய அணிக்காக விளையாடி வந்தார். இறுதியாக இந்த ஆண்டு ஐபிஎல் தொடருடன் ஒட்டுமொத்த கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெற்றார்.

- Advertisement -

கேதார் ஜாதவ்
இந்திய அணிக்காகவும், ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணிக்காகவும் விளையாடி பிரபலம் அடைந்த இவர் இந்த ஆண்டுடன் கிரிக்கெட் வாழ்க்கையை முடித்துக் கொண்டார்.

விராட் கோலி
2010 ஜிம்பாப்வே அணிக்கு எதிராக சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அறிமுகமாகிய விராட் கோலி, இந்த ஆண்டு டி20 உலகக் கோப்பை இறுதிப்போட்டி வெற்றியுடன் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார்.

ரோகித் சர்மா
இந்திய டி20 அணியின் கேப்டனாக இருந்து இந்த ஆண்டு டி20 உலக கோப்பை தொடரை வென்று இறுதிப்போட்டியுடன் விராட் கோலி வழியில் ரோகித் சர்மாவும் ஓய்வு பெற்றார்.

ரவீந்திர ஜடேஜா
விராட் கோலி மற்றும் ரோகித் சர்மாவை தொடர்ந்து இவர்கள் ஓய்வு பெற்ற அதே போட்டியில் இருந்து சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இருந்து ரவீந்திர ஜடேஜாவும் ஓய்வு பெற்றார்.

ஷிகர் தவான்
2010 ஆம் ஆண்டு தனது அறிமுக சர்வதேச டெஸ்ட் போட்டியில் மெகா சாதனை உடன் வந்த ஷிகர் தவான் இந்த ஆண்டு ஒட்டுமொத்த கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வை அறிவித்தார்.

பரிந்தர் சரண்
இடது கை வேகப்பந்துவீச்சாளரான இவர் 2016 ஆம் ஆண்டு இந்திய அணியில் அறிமுகமானார். அதற்கடுத்து பெரிய வாய்ப்புகள் இல்லாது உள்நாட்டு கிரிக்கெட்டில் விளையாடி வந்த இவர் இந்த ஆண்டு ஒட்டுமொத்தமாக கிரிக்கெட்டில் ஓய்வு பெற்றார்.

விரிதிமான் சகா
உலக கிரிக்கெட்டில் மிகச்சிறந்த விக்கெட் கீப்பர்களில் முக்கியமானவரான விரிதிமான் சகா 2010 ஆம் ஆண்டு இந்திய அணிக்காக அறிமுகமாகி இந்த ஆண்டு மொத்தமாக ஓய்வு பெற்றார்.

இதையும் படிங்க : 2025 இந்திய அணியின் முழு போட்டி அட்டவணை.. 3 பெரிய நாடுகளின் தொடர்கள்.. மொத்த பட்டியல்

சித்தார்த் கவுல்
வலது கை வேகப்பந்துவீச்சாளரான இவர் 2018 ஆம் ஆண்டு முதல் 19 ஆம் ஆண்டு வரையில் இந்திய அணிக்கு விளையாடினார். மேலும் இந்த ஆண்டுடன் மொத்தமாக கிரிக்கெட்டில் ஓய்வு பெற்றார்.

ரவிச்சந்திரன் அஸ்வின்
இந்த பட்டியலில் மிக முக்கியமான பெயராக இவருடைய பெயர் இருக்கிறது. இந்திய அணிக்காக 106 டெஸ்ட் போட்டிகளில் 537 விக்கெட் கைப்பற்றி லெஜன்ட் வீரராக உருவெடுத்து இந்த ஆண்டுடன் ஓய்வு பெற்றார்.

- Advertisement -
Published by

Recent Posts