இந்த ஆண்டு டி20 உலகக்கோப்பை அணியில் சேர்க்கப்படாத 11 நட்சத்திர வீரர்கள்!

0
6402
T20i wc 2022

ஆஸ்திரேலியாவில் அக்டோபர் 16ஆம் தேதி ஆரம்பித்து நவம்பர் 13ஆம் தேதி வரையில் டி20 உலகக் கோப்பை தொடர் நடக்க இருக்கிறது. இந்த உலகக் கோப்பைத் தொடரில் பங்கேற்கும் 16 அணிகளும் தங்கள் 15 பேர் கொண்ட அணியை ஐசிசியிடம் சமர்ப்பித்து இருக்கின்றன. டி20 உலகக் கோப்பைக்கான 15 பேர் கொண்ட தங்கள் நாட்டு அணியில் இடம் பெற முடியாமல் போன 11 நட்சத்திர வீரர்கள் யார் என்று தான் இந்தக் கட்டுரை தொகுப்பில் நாம் பார்க்கப் போகிறோம்!

துவக்க ஆட்டக்காரர்கள்;

- Advertisement -

ஜேசன் ராய் மற்றும் சஞ்சு சாம்சன்.
2019 இங்கிலாந்தில் நடந்த 50 ஓவர் உலகக்கோப்பைக்காகத் துவக்க வீரராகத் தயார் செய்யப்பட்டவர் ஜேசன் ராய். ஆனால் தற்போது இவரது பேட்டிங் ஃபார்ம் மிகவும் மோசமாக இருப்பதால் பேர்ஸ்டோ காயமடைந்தும் கூட இவருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. சஞ்சு சாம்சன் எதிர்கால இந்திய அணியின் நம்பிக்கையான வீரர்களில் ஒருவர். அணியில் இளம் மற்றும் அனுபவ விக்கெட் கீப்பர்களாக ரிஷப் பண்ட் மற்றும் தினேஷ் கார்த்திக் இடம் பெற்று இருப்பதால் விக்கெட் கீப்பிங் பேட்ஸ்மேனான இவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை.

நடுவரிசை பேட்ஸ்மேன்கள் :

சோயப் மாலிக், மகமதுல்லா, சிம்ரன் ஹெட்மையர்.

- Advertisement -

இளம் பாகிஸ்தான் அணியை உருவாக்க 40 வயது கடந்த சோயப் மாலிக் புறக்கணிக்கப்பட்டு இருக்கிறார். மிக மோசமான நிலையில் இருக்கும் டி20 பங்களாதேஷ் அணியை மீட்டுருவாக்கம் செய்ய அனுபவ வீரர் மகமதுல்லா ஓரங்கட்டப்பட்டு இருக்கிறார். ஆஸ்திரேலியா கிளம்பிய வெஸ்ட் இண்டீஸ் அணியில் இவரால் சரியான நேரத்தில் இணைய முடியாமல் இரண்டு முறை போனதால், வெறுத்துப்போன வெஸ்ட் இண்டீஸ் அணி நிர்வாகம் இவரை 15 பேர் கொண்ட உலக கோப்பை வெஸ்ட் இண்டீஸ் அணியில் இருந்து அதிரடியாக நீக்கி இருக்கிறது.

ஆல்ரவுண்டர்கள்:

ஆன்ட்ரே ரசல் மற்றும் பேபியன் ஆலன்.
வெஸ்ட்இண்டீஸ் அணிக்காக விளையாட விருப்பம் காட்டாத ஆன்ட்ரே ரசலை ஓரம்கட்டி, அணிக்காக விளையாட விரும்பும் வீரர்களுக்கு வெஸ்ட் இண்டீஸ் அணி நிர்வாகம் வாய்ப்பளித்திருக்கிறது. இடது கை சுழற்பந்து வீச்சு ஆல்ரவுண்டரான ஃபேபியன் ஆலன், இவரைப்போலவே செயல்படும் அகேல் ஹூசைன் அணியில் இருப்பதால் இடத்தை இழந்திருக்கிறார்.

சுழற்பந்து வீச்சாளர்கள் :

சுனில் நரைன் மற்றும் மெஹதி ஹசன்.
சுனில் நரைனும் வெஸ்ட்இண்டீஸ் அணிக்காக விளையாட பெரிய விருப்பம் காட்டாததால் ஒதுக்கப்பட்டு இருக்கிறார். பங்களாதேஷ் அணியில் நிறைய சுழற்பந்து வீச்சு ஆல்ரவுண்டர்கள் இருப்பதால் மெஹதி ஹசனுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டு இருக்கிறது.

வேகப்பந்து வீச்சாளர்கள் :

ஆவேஸ் கான் மற்றும் மதிஷ பதிரண.
டி20 உலகக் கோப்பைக்காகவே இந்திய அணியில் இவருக்கு பல வாய்ப்புகள் கொடுக்கப்பட்டது. ஆனால் இவர் தொடர்ந்து சீராகச் சிறப்பாக செயல்படாத காரணத்தால், டி20 உலகக் கோப்பை இந்திய அணியில் இருந்து ஒதுக்கப்பட்டு இருக்கிறார். இலங்கை அண்டர் 19 அணியில் இருந்து வந்த இந்த குட்டி மலிங்காவிற்கு வாய்ப்புகள் மறுக்கப்பட்டு இருக்கிறது. அணியில் புதிதாக வந்த வேகப்பந்து வீச்சாளர்கள் ஆசியக் கோப்பையில் சிறப்பாக செயல்பட இவருக்கு வாய்ப்பு தர முடியாத நிலை உருவாகியது.